• Apr 27 2024

பரீட்சை வினாத்தாள்களை திருத்த பின்னடிக்கும் ஆசிரியர்கள்-ஜோசப் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

Sharmi / Jan 4th 2023, 2:59 pm
image

Advertisement

பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முறையான பணம் கொடுப்பதில்லை .கொடுக்கின்ற கொடுப்பனவு குறைந்தளவிலே இருக்கின்றன.இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள்,அதிபர்கள் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் செயற்பாடுகளுக்கு வருகை தருவது குறைந்துள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆசிரியர்களுக்கு  கொடுப்பனவுகள் கொடுக்கா விடின் என்ன நடக்கும்? ஆசிரியரகள் இந்த பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் செயற்பாடுகளுக்கு வர மாட்டார்கள். அவ்வாறு  வராமல் விட்டால் யாரைக் கொண்டு வினாத்தாள்கள் திருத்துவது? 

எனவே இந்த அரசாங்கம் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து ,அதற்கு முறையான கொடுப்பனவுகளை கொடுக்க வேண்டும். முறையான கொடுப்பனவுகளை வழங்குவோம்  என அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பரீட்சை வினாத்தாள்களை திருத்த பின்னடிக்கும் ஆசிரியர்கள்-ஜோசப் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முறையான பணம் கொடுப்பதில்லை .கொடுக்கின்ற கொடுப்பனவு குறைந்தளவிலே இருக்கின்றன.இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள்,அதிபர்கள் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் செயற்பாடுகளுக்கு வருகை தருவது குறைந்துள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஆசிரியர்களுக்கு  கொடுப்பனவுகள் கொடுக்கா விடின் என்ன நடக்கும் ஆசிரியரகள் இந்த பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் செயற்பாடுகளுக்கு வர மாட்டார்கள். அவ்வாறு  வராமல் விட்டால் யாரைக் கொண்டு வினாத்தாள்கள் திருத்துவது எனவே இந்த அரசாங்கம் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து ,அதற்கு முறையான கொடுப்பனவுகளை கொடுக்க வேண்டும். முறையான கொடுப்பனவுகளை வழங்குவோம்  என அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement