• Jun 16 2024

தமிழர் விவகாரத்தில் இந்தியாவை நம்பி பயனில்லை-காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து!SamugamMedia

Sharmi / Feb 27th 2023, 2:14 pm
image

Advertisement

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத்தரும் என்று நம்ப வேண்டாம் என வவுனியாவில் கடந்த 2200 நாட்களாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

தமிழர்களையும் பண்பாட்டையும் காக்க முனைந்த அமரர் பேராசிரியர் விக்கினேஸ்வரனுக்கு நாமும் தலை வணங்குகிறோம்.துணைவேந்தராக கடமையாற்றிய அவர் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமையும்,அரசியல் கோரிக்கைகள் கொண்ட நினைவு தூபி அமைப்பதைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் உத்தரவின் பேரில் பதவியில்  இருந்து நீக்கப்பட்டார்.பேராசிரியர் விக்கினேஸ்வரன் போன்ற தலைவர்கள் தமிழர்களுக்கு அதிகம் தேவை.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படியான வடக்கு-கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை போன்ற அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நீதித்துறையின் நிலையினை சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம்.வடக்கு கிழக்கில் தமிழ் நீதியரசர்களின்  தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்து விடும்.

"பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்" என்று வாஷிங்டன் நம்புவதாக 1984 இல் மதிப்பிடப்பட்ட ஆவணம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

எனவே தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும்.

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.
ரஷ்யாவின் புட்டின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது.ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது.

எனவே  நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம் என்றனர்.

தமிழர் விவகாரத்தில் இந்தியாவை நம்பி பயனில்லை-காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருத்துSamugamMedia சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத்தரும் என்று நம்ப வேண்டாம் என வவுனியாவில் கடந்த 2200 நாட்களாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்தனர்.  வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,தமிழர்களையும் பண்பாட்டையும் காக்க முனைந்த அமரர் பேராசிரியர் விக்கினேஸ்வரனுக்கு நாமும் தலை வணங்குகிறோம்.துணைவேந்தராக கடமையாற்றிய அவர் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமையும்,அரசியல் கோரிக்கைகள் கொண்ட நினைவு தூபி அமைப்பதைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் உத்தரவின் பேரில் பதவியில்  இருந்து நீக்கப்பட்டார்.பேராசிரியர் விக்கினேஸ்வரன் போன்ற தலைவர்கள் தமிழர்களுக்கு அதிகம் தேவை.இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படியான வடக்கு-கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை போன்ற அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நீதித்துறையின் நிலையினை சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம்.வடக்கு கிழக்கில் தமிழ் நீதியரசர்களின்  தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்து விடும்."பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்" என்று வாஷிங்டன் நம்புவதாக 1984 இல் மதிப்பிடப்பட்ட ஆவணம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.எனவே தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும்.சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.ரஷ்யாவின் புட்டின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது.ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது.எனவே  நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement