• Sep 19 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் நீக்கம்?? - அலி சப்ரி ரஹீமை வெளியேற்ற ஆதரவு வழங்கிய அமைச்சர்..! samugammedia

Chithra / May 28th 2023, 3:31 pm
image

Advertisement

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நீக்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக விமான நிலையத்தின் பிரமுகர்களின் முனையங்களுக்கூடாக சோதனையின்றி பயணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொண்ட செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான முன்மொழிவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற சிறப்புரிமைகள் அகற்றப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகள் நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சுமார் ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசியுடன் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்தபோது,  கடந்த 23ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டு 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கையில் இருந்து வெளியொறி துபாய்க்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் நீக்கம் - அலி சப்ரி ரஹீமை வெளியேற்ற ஆதரவு வழங்கிய அமைச்சர். samugammedia வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நீக்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக விமான நிலையத்தின் பிரமுகர்களின் முனையங்களுக்கூடாக சோதனையின்றி பயணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொண்ட செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான முன்மொழிவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவையற்ற சிறப்புரிமைகள் அகற்றப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகள் நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சுமார் ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசியுடன் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்தபோது,  கடந்த 23ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டு 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கையில் இருந்து வெளியொறி துபாய்க்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement