• Jan 19 2026

கொத்மலையில் 2 மாதங்களுக்குப் பின் துரித கதியில் மறுசீரமைப்புப் பணிகள்!

Chithra / Jan 18th 2026, 2:07 pm
image


டித்வா சூறாவளியால் அதிகம் சேதமடைந்த கொத்மலை பனங்கம்மன பகுதியிலும், கொத்மலை மஹ பீல்ல எல பகுதியிலும் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இந்தப் பணிகள் நாளை திங்கட்கிழமை (19) வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.


கொத்மலை பனங்கம்மன பகுதியிலுள்ள சுமார் 20 பிரதேசங்களுக்கு செல்லும் வீதி முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியதால், அந்தக் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 2 மாதங்களாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


இதன் விளைவாக, அனுராதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் வீதியை புனரமைக்க முன்வந்துள்ளனர்.


கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 2000 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் கொத்மலை மஹ பீல்லஎல பகுதியில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கொத்மலையில் 2 மாதங்களுக்குப் பின் துரித கதியில் மறுசீரமைப்புப் பணிகள் டித்வா சூறாவளியால் அதிகம் சேதமடைந்த கொத்மலை பனங்கம்மன பகுதியிலும், கொத்மலை மஹ பீல்ல எல பகுதியிலும் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இந்தப் பணிகள் நாளை திங்கட்கிழமை (19) வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.கொத்மலை பனங்கம்மன பகுதியிலுள்ள சுமார் 20 பிரதேசங்களுக்கு செல்லும் வீதி முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியதால், அந்தக் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 2 மாதங்களாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இதன் விளைவாக, அனுராதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் வீதியை புனரமைக்க முன்வந்துள்ளனர்.கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 2000 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் கொத்மலை மஹ பீல்லஎல பகுதியில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Advertisement

Advertisement

Advertisement