• May 25 2024

IMFகடனை திருப்பி செலுத்தும்போது மீண்டும் பொருளாதர வீழ்ச்சி ஏற்படும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்...! samugammedia

Anaath / Sep 30th 2023, 12:09 pm
image

Advertisement

IMF சர்வதேச நாணய நிதியம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கு ஏறத்தாள இரண்டே முக்கால் பில்லியன் டொலரை  கொடுப்பதற்கான ஒரு ஒப்புதலை ஏற்கனவே வழங்கியது. அதன் பிரகாரம் முதல் கட்டமாக ஒரு குறிக்கப்பட்ட பணம் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக பணம் வழங்குவதற்கான திகதிகள் வழங்க பட்டிருந்தாலும்  கூட இலங்கை அரசாங்கம் ஏற்று கொண்ட வகையில் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிமுறைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை என  ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம் நடத்திய  ஊடக சந்திப்பதிலேயே அவர் இவ்வ்ரு தெரிவித்துள்ளார்.

முக்கியமாக இந்த  வரி அறவீடுகள் அது ஒரு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றும் இலங்கையினுடைய  வருமானம் செலவுகளுக்கிடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றது என்ற அடிப்படையில் இவ்வாறு தொடர்ந்தால் இரண்டாவது குடுக்க வேண்டிய நிதியில் காலதாமதம் ஏற்படும் என்ற நிலவரம் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. 

முக்கியமாக சொல்வதாக இருந்தால் ஆரம்பத்தில் ஒரு சில கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டது. எவ்வாறு என்று சொன்னால் திரு ரணில் விக்கிரமசிங்க நாட்டினுடைய பொருளாதாரத்தினை  மீள கொண்டு வந்து விடுவார். என்ற ஒரு விஷயம் சொல்லப்பட்டது. 

ஆகவே அவரும் வந்தவுடன் அவர் உடனடியாக செய்த வேலை என்னவென்றால் நாட்டை வங்குரோத்து அடைந்த நாடு என்று அறிவித்தார். வங்குரோத்து அடைந்த நாடு என்று அறிவித்ததன் காரணமாக கடன்களை  கட்ட வேண்டிய தேவை இல்லை என்ற ஒரு நிலவரம் உருவானது. கடன்களை காட்டாமல் இருந்ததன் காரணமாக வரக்கூடிய வருமானத்திலிருந்து பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது. 

ஆகவே  Queueவில் நின்ற மக்களுக்கு ஓரளவுக்கு அவர் நிவாரணம் கொடுத்தார். எவ்வாறு நிவாரணம் கொடுக்கப்பட்டது என்றால் வெளிநாட்டு கடன்களை கொடுக்காமல்  நாடு திவாலாகிவிட்டது என்று அறிவிப்பை  செய்து வரக்கூடிய வருமானத்திலிருந்து தான் இந்த எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது. 

இந்த எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்படுகின்ற அதே சமயம் எதிர்காலத்தில் உங்களுக்கு கடனை கட்ட ஆரம்பிக்க படுமாக  இருந்தால் இந்த வருமானத்தில் மீண்டு வீழ்ச்சி ஏற்பட அந்த வீழ்ச்சி மீண்டும் இதே மாதிரியான சூழல் தோற்றுவிக்கப்படுகின்ற வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது. 

எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டினினுடைய பொருளாதார எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறதுதான் இருக்கக்கூடிய கேள்வி. இந்த நாட்டின்  அபிவிருத்திவில் வெளிநாட்டு மூலதனங்கள் எவ்வளவு நாட்டுக்குள் வந்திருக்கின்றது? உள்நாட்டில் எவ்வளவு தூரம் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது? உள்நாட்டில் எவ்வளவு தூரம் வருமானங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு போகிறார்கள்  என்பதுதான் அதிகரித்திருக்கிறது. அது சிங்கள மக்களாக இருக்கலாம், முஸ்லீம் மக்களாக இருக்கலாம், தமிழ் மக்களாக இருக்கலாம் பல மக்கள் முன்னரிலும் விட எல்லோரும் வெளிநாட்டை நோக்கி ஓடுகிறார்கள் ஏனென்று சொன்னால் இங்கு எதிர்காலம்  இல்லை என்பது ஒரு விடயமாக அமைந்து கொண்டிருக்கிறது. 

ஆகவே அவ்வாறான சூழ்நிலையில் நிச்சயமாக இலங்கை அரசாங்கம் IMF கொடுத்த Condition அவர்கள் என்னென்ன விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்களோ அதனை செய்வார்களா என்பது ஒரு கேள்விக்குரிய விடயமாக இருக்கின்றது. 

செய்கிற பட்சத்தில் வரிகள் அதிகரிக்கப்பட போகிறது. வரிகள் அதிகரிக்கப்பட்டால் விலைகள் அதிகரிக்க போகிறது. விலைகள் அதிகரித்தால் ஏற்கனவே மூன்று வேலை சாப்பிடுகிறவர்கள் இரண்டுவேளை சாப்பிடுகிற நிலையில் அது ஒருவேளை சாப்பிடுவதற்காக நிலைமையும் ஏற்படலாம். ஆகவே இந்த நிலையில் இந்த நாட்டில் வறுமை என்பது என்னும் உச்சகட்டத்தை நோக்கி போகும். ஏனென்று சொன்னால் எங்களுக்கு சம்பள உயர்ச்சி என்பது முக்கியமாக அரசாங்க சேவையாளர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம், ஏனைய துறைகளில் இருக்க கூடியவர்களாக இருக்கலாம், சம்பளத்தி எந்த விதமான அதிகரிப்பும் இல்லை , ஆன்ல விழா ஏற்றங்கள் மொன்று மடங்காக நான்கு மடங்காக விலை ஏற்றங்கள் இருக்கின்றது. 

இந்த சூழ்நிலையில் பொருட்களை வேண்ட முடியுமா? அல்லது பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா? கல்விக்கான உதவிகளை செய்ய முடியுமா என்று சொன்னால் மக்கள் மிக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆகவே இவற்றுக்கான தீர்வு இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வி இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆகவே IMF அடுத்த கட்ட நிதியை கொடுக்க வேண்டுமாக இருந்தால் இலங்கை மக்கள் இன்னும் இன்னும் அரசாங்கத்தால் வரி என்ற போர்வையில் துன்புறுத்தப்பட்ட போகிறார்கள்  சாப்பாட்டுக்கே அல்லல் படுகின்ற சூழல் தன தோன்றி வருகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.


IMFகடனை திருப்பி செலுத்தும்போது மீண்டும் பொருளாதர வீழ்ச்சி ஏற்படும் - சுரேஷ் பிரேமச்சந்திரன். samugammedia IMF சர்வதேச நாணய நிதியம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கு ஏறத்தாள இரண்டே முக்கால் பில்லியன் டொலரை  கொடுப்பதற்கான ஒரு ஒப்புதலை ஏற்கனவே வழங்கியது. அதன் பிரகாரம் முதல் கட்டமாக ஒரு குறிக்கப்பட்ட பணம் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக பணம் வழங்குவதற்கான திகதிகள் வழங்க பட்டிருந்தாலும்  கூட இலங்கை அரசாங்கம் ஏற்று கொண்ட வகையில் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிமுறைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை என  ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழில் நேற்றையதினம் நடத்திய  ஊடக சந்திப்பதிலேயே அவர் இவ்வ்ரு தெரிவித்துள்ளார்.முக்கியமாக இந்த  வரி அறவீடுகள் அது ஒரு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றும் இலங்கையினுடைய  வருமானம் செலவுகளுக்கிடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றது என்ற அடிப்படையில் இவ்வாறு தொடர்ந்தால் இரண்டாவது குடுக்க வேண்டிய நிதியில் காலதாமதம் ஏற்படும் என்ற நிலவரம் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. முக்கியமாக சொல்வதாக இருந்தால் ஆரம்பத்தில் ஒரு சில கருத்துக்கள்  முன்வைக்கப்பட்டது. எவ்வாறு என்று சொன்னால் திரு ரணில் விக்கிரமசிங்க நாட்டினுடைய பொருளாதாரத்தினை  மீள கொண்டு வந்து விடுவார். என்ற ஒரு விஷயம் சொல்லப்பட்டது. ஆகவே அவரும் வந்தவுடன் அவர் உடனடியாக செய்த வேலை என்னவென்றால் நாட்டை வங்குரோத்து அடைந்த நாடு என்று அறிவித்தார். வங்குரோத்து அடைந்த நாடு என்று அறிவித்ததன் காரணமாக கடன்களை  கட்ட வேண்டிய தேவை இல்லை என்ற ஒரு நிலவரம் உருவானது. கடன்களை காட்டாமல் இருந்ததன் காரணமாக வரக்கூடிய வருமானத்திலிருந்து பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது. ஆகவே  Queueவில் நின்ற மக்களுக்கு ஓரளவுக்கு அவர் நிவாரணம் கொடுத்தார். எவ்வாறு நிவாரணம் கொடுக்கப்பட்டது என்றால் வெளிநாட்டு கடன்களை கொடுக்காமல்  நாடு திவாலாகிவிட்டது என்று அறிவிப்பை  செய்து வரக்கூடிய வருமானத்திலிருந்து தான் இந்த எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது. இந்த எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்படுகின்ற அதே சமயம் எதிர்காலத்தில் உங்களுக்கு கடனை கட்ட ஆரம்பிக்க படுமாக  இருந்தால் இந்த வருமானத்தில் மீண்டு வீழ்ச்சி ஏற்பட அந்த வீழ்ச்சி மீண்டும் இதே மாதிரியான சூழல் தோற்றுவிக்கப்படுகின்ற வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டினினுடைய பொருளாதார எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறதுதான் இருக்கக்கூடிய கேள்வி. இந்த நாட்டின்  அபிவிருத்திவில் வெளிநாட்டு மூலதனங்கள் எவ்வளவு நாட்டுக்குள் வந்திருக்கின்றது உள்நாட்டில் எவ்வளவு தூரம் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது உள்நாட்டில் எவ்வளவு தூரம் வருமானங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு போகிறார்கள்  என்பதுதான் அதிகரித்திருக்கிறது. அது சிங்கள மக்களாக இருக்கலாம், முஸ்லீம் மக்களாக இருக்கலாம், தமிழ் மக்களாக இருக்கலாம் பல மக்கள் முன்னரிலும் விட எல்லோரும் வெளிநாட்டை நோக்கி ஓடுகிறார்கள் ஏனென்று சொன்னால் இங்கு எதிர்காலம்  இல்லை என்பது ஒரு விடயமாக அமைந்து கொண்டிருக்கிறது. ஆகவே அவ்வாறான சூழ்நிலையில் நிச்சயமாக இலங்கை அரசாங்கம் IMF கொடுத்த Condition அவர்கள் என்னென்ன விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்களோ அதனை செய்வார்களா என்பது ஒரு கேள்விக்குரிய விடயமாக இருக்கின்றது. செய்கிற பட்சத்தில் வரிகள் அதிகரிக்கப்பட போகிறது. வரிகள் அதிகரிக்கப்பட்டால் விலைகள் அதிகரிக்க போகிறது. விலைகள் அதிகரித்தால் ஏற்கனவே மூன்று வேலை சாப்பிடுகிறவர்கள் இரண்டுவேளை சாப்பிடுகிற நிலையில் அது ஒருவேளை சாப்பிடுவதற்காக நிலைமையும் ஏற்படலாம். ஆகவே இந்த நிலையில் இந்த நாட்டில் வறுமை என்பது என்னும் உச்சகட்டத்தை நோக்கி போகும். ஏனென்று சொன்னால் எங்களுக்கு சம்பள உயர்ச்சி என்பது முக்கியமாக அரசாங்க சேவையாளர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம், ஏனைய துறைகளில் இருக்க கூடியவர்களாக இருக்கலாம், சம்பளத்தி எந்த விதமான அதிகரிப்பும் இல்லை , ஆன்ல விழா ஏற்றங்கள் மொன்று மடங்காக நான்கு மடங்காக விலை ஏற்றங்கள் இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பொருட்களை வேண்ட முடியுமா அல்லது பிள்ளைகளுக்கு வைத்தியம் பார்க்க முடியுமா கல்விக்கான உதவிகளை செய்ய முடியுமா என்று சொன்னால் மக்கள் மிக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆகவே இவற்றுக்கான தீர்வு இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வி இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆகவே IMF அடுத்த கட்ட நிதியை கொடுக்க வேண்டுமாக இருந்தால் இலங்கை மக்கள் இன்னும் இன்னும் அரசாங்கத்தால் வரி என்ற போர்வையில் துன்புறுத்தப்பட்ட போகிறார்கள்  சாப்பாட்டுக்கே அல்லல் படுகின்ற சூழல் தன தோன்றி வருகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement