• May 20 2024

காணிகள் தொடர்பில் வலி.வடக்கு மக்களிடம் பிரதேச செயலகம் விடுத்துள்ள கோரிக்கை! samugammedia

Chithra / May 11th 2023, 10:04 am
image

Advertisement

வலி.வடக்கில் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தி தங்களுக்குச் சொந்தமான உடைமைகளைப் பாதுகாக்க உரிமையாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பழை பிரதேச செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுளள பிரதேசங்களில் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் உடைமைகளை திருட்டுக் கும்பலிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை 30 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்டிருந்த வலி வடக்கின் சில பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்கள் மூலமும், கிராம அலுவலகர்கள் மூலமும் உடைமைகளைப் பாதுகாக்குமாறு ஏற்கனவே கோரியிருந்தோம்.

எனினும் சிலர்  தமது காணிகளையும் உடைமைகளையும் அடையாளப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும்  அசமந்த போக்கிலுள்ளனர். 

இதனைப் பயன்படுத்தி பல்வேறு பிரதேசங்களிலிருந்து வரும் திருட்டுக் கும்பல்கள் பல பெறுமதியான உடைமைகளைத் திருடிச் செல்கின்றனர்.

எது எவ்வறாயினும் பொதுமக்களின் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு பொலிஸாரும் கிராம மட்ட அமைப்புக்களும் 24 மணி நேரமும் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க இயலாத காரணத்தினால்  காணி உரிமையாளர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றனர்.

காணிகளை துப்புரவாக்குதல், அடையாளப்படுத்தல் போன்றவற்றிற்கு உதவிகள் தேவைப்படின் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


காணிகள் தொடர்பில் வலி.வடக்கு மக்களிடம் பிரதேச செயலகம் விடுத்துள்ள கோரிக்கை samugammedia வலி.வடக்கில் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தி தங்களுக்குச் சொந்தமான உடைமைகளைப் பாதுகாக்க உரிமையாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பழை பிரதேச செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுளள பிரதேசங்களில் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் உடைமைகளை திருட்டுக் கும்பலிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.இதேவேளை 30 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்டிருந்த வலி வடக்கின் சில பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்கள் மூலமும், கிராம அலுவலகர்கள் மூலமும் உடைமைகளைப் பாதுகாக்குமாறு ஏற்கனவே கோரியிருந்தோம்.எனினும் சிலர்  தமது காணிகளையும் உடைமைகளையும் அடையாளப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும்  அசமந்த போக்கிலுள்ளனர். இதனைப் பயன்படுத்தி பல்வேறு பிரதேசங்களிலிருந்து வரும் திருட்டுக் கும்பல்கள் பல பெறுமதியான உடைமைகளைத் திருடிச் செல்கின்றனர்.எது எவ்வறாயினும் பொதுமக்களின் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு பொலிஸாரும் கிராம மட்ட அமைப்புக்களும் 24 மணி நேரமும் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க இயலாத காரணத்தினால்  காணி உரிமையாளர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றனர்.காணிகளை துப்புரவாக்குதல், அடையாளப்படுத்தல் போன்றவற்றிற்கு உதவிகள் தேவைப்படின் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement