• May 17 2024

தம்பதிகளிற்கு 12,640 ஆண்டுகள் சிறை தண்டனை...!அதிர்ச்சியடைந்த மக்கள்..!samugammedia

Sharmi / May 11th 2023, 10:08 am
image

Advertisement


தம்பதி ஒன்றுக்கு தலா 12,640 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளமை  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் தாய்­லாந்­தில் இடம்பெற்றுள்ளது.

வந்­தானி டிப்­பா­வேத்­தும் மற்றும் அவரது கண­வர் மேதி சின்­பா­ ஆகியோரிற்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்தமையாலே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது குற்றங்களை அவர்கள் ஒப்­புக் கொண்­ட­தால் சிறை  தண்­டனை 5,056 ஆண்­டு­க­ளாக   குறைக்­கப்­பட்டுள்ளது.

இருப்பினும் தம்பதிகள் இருவரும் இரு­பது ஆண்­டு­கள் மட்­டுமே சிறைத் தண்­ட­னையை அனு­ப­விப்­பார்­கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், அந்­நாட்­டில் அதிக­பட்சமாக  சிறைத் தண்­டனை இரு­பது ஆண்­டு­க­ள் மட்டுமே  நடைமுறையில் காணப்படுகின்றது.

அத்துடன், தம்­ப­தி­யி­னர் ஏழு பேரு­டன் சேர்ந்து தமது  சேமிப்­புத் திட்­டத்­தில் முதலீடு செய்­தால் 93% இலாபம் கிடைக்­கும் என்று கூறி 2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்­டோ­பர் வரை­யில் ஃபேஸ்புக் மூல­மாக பல­ரைச் சேர்த்­துள்­ள­னர்.

இவர்­க­ளது மோசடி திட்­டத்­தில் மொத்­தம் 2,533 பேர் 1.3 பில்­லி­யன் பாட் (S$51.3 மில்­லி­யன்) முத­லீடு செய்­துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

தம்பதிகளிற்கு 12,640 ஆண்டுகள் சிறை தண்டனை.அதிர்ச்சியடைந்த மக்கள்.samugammedia தம்பதி ஒன்றுக்கு தலா 12,640 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளமை  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் தாய்­லாந்­தில் இடம்பெற்றுள்ளது. வந்­தானி டிப்­பா­வேத்­தும் மற்றும் அவரது கண­வர் மேதி சின்­பா­ ஆகியோரிற்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்தமையாலே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது குற்றங்களை அவர்கள் ஒப்­புக் கொண்­ட­தால் சிறை  தண்­டனை 5,056 ஆண்­டு­க­ளாக   குறைக்­கப்­பட்டுள்ளது. இருப்பினும் தம்பதிகள் இருவரும் இரு­பது ஆண்­டு­கள் மட்­டுமே சிறைத் தண்­ட­னையை அனு­ப­விப்­பார்­கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், அந்­நாட்­டில் அதிக­பட்சமாக  சிறைத் தண்­டனை இரு­பது ஆண்­டு­க­ள் மட்டுமே  நடைமுறையில் காணப்படுகின்றது. அத்துடன், தம்­ப­தி­யி­னர் ஏழு பேரு­டன் சேர்ந்து தமது  சேமிப்­புத் திட்­டத்­தில் முதலீடு செய்­தால் 93% இலாபம் கிடைக்­கும் என்று கூறி 2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்­டோ­பர் வரை­யில் ஃபேஸ்புக் மூல­மாக பல­ரைச் சேர்த்­துள்­ள­னர். இவர்­க­ளது மோசடி திட்­டத்­தில் மொத்­தம் 2,533 பேர் 1.3 பில்­லி­யன் பாட் (S$51.3 மில்­லி­யன்) முத­லீடு செய்­துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement