• May 21 2024

தமிழரின் தலைவிதியினை தமிழரே தீர்மானிக்கும் காலம்..! பொது வாக்கெடுப்பில் தம்மையும் இணைத்துக்கொண்ட பிரித்தானிய மக்கள்! samugammedia

Chithra / May 11th 2023, 10:14 am
image

Advertisement

எதை இழந்தாலும் ஓர் இனம் தனது சொந்த மண்ணை இழக்கக் கூடாது என்பதற்கு சான்றாக கிழக்குத் தீமோர், கொசோவா, தென் சூடான் போன்ற பல நாடுகள் தங்கள் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்திய ஒரு பொறிமுறையான "Yes to Referendum" மாதிரி பொது வாக்கெடுப்பானது பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது.

கடந்த 01/05/2023 தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழாவிலும் 08/05/2023 அன்று மன்னார் நலன் புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவிலும் இம் மாதிரி வாக்கெடுப்பானது நடாத்தப்பட்டது.

பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினால் இம் மாதிரி வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இம் மாதிரி வாக்கெடுப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டதோடு விளையாட்டுகளில் பங்குப்பற்றிய 18 வயதிற்கு மேற்பட்ட இளம் தலைமுறையினரும் தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.

01/05/2023 நடைபெற்ற மாதிரி பொது வாக்கெடுப்பில் வாக்களிப்பின் இறுதியில் 98% மக்கள் தாங்கள் தமிழீழம் ஒன்றே தமக்கான தீர்வு என்றும் 2% மக்கள் ஒரு நாடு இரண்டு அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

08/05/2023 நடைபெற்ற மாதிரி பொது வாக்கெடுப்பில் வாக்களிப்பின் இறுதியில் 90% மக்கள் தாங்கள் தமிழீழம் ஒன்றே தமக்கான தீர்வு என்றும் 8% மக்கள் ஒரு நாடு இரண்டு அரசுக்கு ஆதரவாகவும் 2% மக்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

தமிழரின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் காலம் வரும்போது எம் இளம் தலைமுறையினர் அதில் தாங்களும் பங்கு கொள்ளவேண்டும் என்ற தூர நோக்குடனே இது போன்ற மாதிரி பொது வாக்கெடுப்புகள் "பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினரால்" உலகம் பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது.


தமிழரின் தலைவிதியினை தமிழரே தீர்மானிக்கும் காலம். பொது வாக்கெடுப்பில் தம்மையும் இணைத்துக்கொண்ட பிரித்தானிய மக்கள் samugammedia எதை இழந்தாலும் ஓர் இனம் தனது சொந்த மண்ணை இழக்கக் கூடாது என்பதற்கு சான்றாக கிழக்குத் தீமோர், கொசோவா, தென் சூடான் போன்ற பல நாடுகள் தங்கள் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்திய ஒரு பொறிமுறையான "Yes to Referendum" மாதிரி பொது வாக்கெடுப்பானது பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது.கடந்த 01/05/2023 தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கோடை கால விளையாட்டு விழாவிலும் 08/05/2023 அன்று மன்னார் நலன் புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவிலும் இம் மாதிரி வாக்கெடுப்பானது நடாத்தப்பட்டது.பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினால் இம் மாதிரி வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.இம் மாதிரி வாக்கெடுப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டதோடு விளையாட்டுகளில் பங்குப்பற்றிய 18 வயதிற்கு மேற்பட்ட இளம் தலைமுறையினரும் தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.01/05/2023 நடைபெற்ற மாதிரி பொது வாக்கெடுப்பில் வாக்களிப்பின் இறுதியில் 98% மக்கள் தாங்கள் தமிழீழம் ஒன்றே தமக்கான தீர்வு என்றும் 2% மக்கள் ஒரு நாடு இரண்டு அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.08/05/2023 நடைபெற்ற மாதிரி பொது வாக்கெடுப்பில் வாக்களிப்பின் இறுதியில் 90% மக்கள் தாங்கள் தமிழீழம் ஒன்றே தமக்கான தீர்வு என்றும் 8% மக்கள் ஒரு நாடு இரண்டு அரசுக்கு ஆதரவாகவும் 2% மக்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.தமிழரின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் காலம் வரும்போது எம் இளம் தலைமுறையினர் அதில் தாங்களும் பங்கு கொள்ளவேண்டும் என்ற தூர நோக்குடனே இது போன்ற மாதிரி பொது வாக்கெடுப்புகள் "பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினரால்" உலகம் பூராகவும் நடாத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement