திருகோணமலை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 07.11.2024 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்கள் மூலம் மீன்களை கொல்வதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
தற்போதைய அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு எவரது செல்வாக்கிற்கும் அஞ்சாமல் தமது கடமைகளை மேற்கொள்ளுமாறும், அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால் மீனவ மக்களின் நலனுக்காக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமலையில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு. திருகோணமலை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.இங்கு திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 07.11.2024 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்கள் மூலம் மீன்களை கொல்வதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. தற்போதைய அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு எவரது செல்வாக்கிற்கும் அஞ்சாமல் தமது கடமைகளை மேற்கொள்ளுமாறும், அரசியல் செல்வாக்கு இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால் மீனவ மக்களின் நலனுக்காக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.