• Dec 05 2024

கிழக்கில் தீவுச் சிறைச்சாலை ஒன்றை நிறுவ தீர்மானம்..!samugammedia

Tharun / Feb 24th 2024, 8:27 pm
image

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் கடலில் அமைந்துள்ள மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாந்தீவை பார்வையிடுவதற்காக நேற்று (23) சென்றிருந்த போதே அமைச்சர் இந்த தகவலினை தெரிவித்துள்ளார்.

அத்துடன்   100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டமாந்தீவில் தற்போது இரண்டு தொழுநோயாளிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா காலத்தில் இலங்கை விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கியதாகவும் மேலும் சிறப்பாக அங்கு பணியாற்ற முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தொழுநோயாளிகள் இருக்கும் இடத்துக்கு இரண்டு தொழு நோயாளிகளையும் மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த இடத்தில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தீவுச் சிறைச்சாலை ஒன்றை நிறுவ தீர்மானம்.samugammedia கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் கடலில் அமைந்துள்ள மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மாந்தீவை பார்வையிடுவதற்காக நேற்று (23) சென்றிருந்த போதே அமைச்சர் இந்த தகவலினை தெரிவித்துள்ளார்.அத்துடன்   100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டமாந்தீவில் தற்போது இரண்டு தொழுநோயாளிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா காலத்தில் இலங்கை விமானப்படையால் கையகப்படுத்தப்பட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கியதாகவும் மேலும் சிறப்பாக அங்கு பணியாற்ற முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தொழுநோயாளிகள் இருக்கும் இடத்துக்கு இரண்டு தொழு நோயாளிகளையும் மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த இடத்தில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement