• Sep 21 2024

வேம்படி மகளிர் கல்லூரியில் மீண்டும் உணவகம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை! samugammedia

Tamil nila / Jul 22nd 2023, 7:10 am
image

Advertisement

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த யாழ். வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 நோய்த் தாக்கம் காரணமாக பாடசாலைகள் பல மாதங்களாக மூடப்பட்டது.

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டும் யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவகம் செயற்படுத்தப்படாததால் அதிகாலை வேளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலையில் உணவு கிடைக்காததால் பாதிப்புக்கு உள்ளாவதாக பெற்றோரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாது பாடசாலைகளில் விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவிகள் பாடசாலையில் உணவகம் இல்லாததால் பெரும் அசௌகரியஙகளை எதிர் நோக்கினர்.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் குறித்த உணவகம் இயங்கமைக்கான காரணத்தை பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்த நிலையில் இட வசதி பிரச்சனை காரணமாக குறித்த உணவகத்தை மீள செயல்படுத்துவது தொடர்பில் சில நடைமுறைச் செயற்பாடுகளால் கால தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார் .

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவை குறித்த பாடசாலையின் மாணவர்களுக்கான உணவகத்தை மீள செயல்படுத்துவது தொடர்பில் நிர்வாக ரீதியான நடைமுறைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் துரித நடவடிக்கையால் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்புடன் திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்தின் உணவகம் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேம்படி மகளிர் கல்லூரியில் மீண்டும் உணவகம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை samugammedia சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த யாழ். வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 நோய்த் தாக்கம் காரணமாக பாடசாலைகள் பல மாதங்களாக மூடப்பட்டது.மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டும் யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவகம் செயற்படுத்தப்படாததால் அதிகாலை வேளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலையில் உணவு கிடைக்காததால் பாதிப்புக்கு உள்ளாவதாக பெற்றோரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அது மட்டுமல்லாது பாடசாலைகளில் விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவிகள் பாடசாலையில் உணவகம் இல்லாததால் பெரும் அசௌகரியஙகளை எதிர் நோக்கினர்.குறித்த விடயம் தொடர்பில் கவனம் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் குறித்த உணவகம் இயங்கமைக்கான காரணத்தை பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்த நிலையில் இட வசதி பிரச்சனை காரணமாக குறித்த உணவகத்தை மீள செயல்படுத்துவது தொடர்பில் சில நடைமுறைச் செயற்பாடுகளால் கால தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார் .இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவை குறித்த பாடசாலையின் மாணவர்களுக்கான உணவகத்தை மீள செயல்படுத்துவது தொடர்பில் நிர்வாக ரீதியான நடைமுறைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.இந்நிலையில் அமைச்சரின் துரித நடவடிக்கையால் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்புடன் திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்தின் உணவகம் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement