• Jan 13 2026

திருகோணமலை - கொழும்பு இடையிலான இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பியுங்கள்!

shanuja / Jan 12th 2026, 8:38 pm
image


திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர  புகையிரத சேவையை மீண்டும் மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக குறித்த இரவு நேர சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.


இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான பகல் நேர சேவை சேவையில் இருந்தாலும் இரவு நேர சேவையின் மூலமாகவே அதிகளவான பயணிகள் பயணிக்கின்றனர்.


உள் நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர சேவை மூலமே திருகோணமலை -கொழும்பு சேவையில் பயணிக்கின்றனர். 


இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால் அதிகளவான வெளிநாட்டு பயணிகளும் கொழும்பில் இருந்து திருகோணமலையை வந்தடைகின்றனர்.


புகையிரத திணைக்களம் இவ்வாறானவற்றை கொண்டு இரவு நேர புகையிரத சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருகோணமலை - கொழும்பு இடையிலான இரவு நேர ரயில் சேவையை மீள ஆரம்பியுங்கள் திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர  புகையிரத சேவையை மீண்டும் மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக குறித்த இரவு நேர சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான பகல் நேர சேவை சேவையில் இருந்தாலும் இரவு நேர சேவையின் மூலமாகவே அதிகளவான பயணிகள் பயணிக்கின்றனர்.உள் நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர சேவை மூலமே திருகோணமலை -கொழும்பு சேவையில் பயணிக்கின்றனர். இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால் அதிகளவான வெளிநாட்டு பயணிகளும் கொழும்பில் இருந்து திருகோணமலையை வந்தடைகின்றனர்.புகையிரத திணைக்களம் இவ்வாறானவற்றை கொண்டு இரவு நேர புகையிரத சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement