• May 19 2024

சபாநாயகர் தலைமையில் மீண்டும் அமர்வு ஆரம்பம் – இரு எம்.பிக்கள் வெளியேற்றம் samugammedia

Chithra / Aug 23rd 2023, 12:07 pm
image

Advertisement

 பாராளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தாா். 

பாராளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

அதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆளுந்தரப்பினரிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்திருந்தனா்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிரசன்ன ரணதுங்க, 10.30 மணிக்கு பின்னர் எந்த கேள்விக்கும் பதிலளிக்க மட்டோம். நீங்கள் விரும்பியதை செய்துகொள்ளுங்கள். எதிர்த் தரப்பினருக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை விளித்து பேசியிருந்தாாா். 

அதன் பின்னர் பிரதி சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக செயற்படவேண்டும். சபை முதல்வர் கூறியது  போன்று ஒரு மணிநேரமே கேள்விகளுக்காக ஒக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஒரு மணிநேரம் முடிவடைந்து விட்டது. அதனால், தேவையில்லாத விடயங்களுக்கு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவித்திருந்தாா்.

தொடர்ந்து நளின் பண்டார எம்.பி. பிங்கிரிய பிரதேச சபையில் பொஜன பெரமுனவின் கூட்டங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து இதற்கு  என்ன நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, அவர் பொருத்தமற்றவகையில் கேள்வி எழுப்புவதாக தெரிவித்து ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனா். 

அதனை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரச்சினைக்கு பொருத்தமற்ற வினாக்களை கேட்கிறார்கள். சபை அமர்வை முன்னெடுக்க முடியாவிட்டால் சபையை ஒத்திவைக்குமாறு பிரதி சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு பிரதமர் வெளியேறியிருந்தார். 

கேள்வி கேட்பதற்கு தமக்கு உரிய நேரம் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் அமைதியற்ற வகையில் செயற்பட்டதால், அதிருப்தியடைந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 10 நிமிடங்களின் பின்னர்  மீண்டும் சபை கூடியது. 

சபை தலைமை பீடத்துக்கு அருகில் வந்து பிரதி சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இன்றைய அமர்விலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தாா். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சபையிலிருந்து வெளியேறினர்

சபாநாயகர் தலைமையில் மீண்டும் அமர்வு ஆரம்பம் – இரு எம்.பிக்கள் வெளியேற்றம் samugammedia  பாராளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தாா். பாராளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆளுந்தரப்பினரிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்திருந்தனா்.அதனை தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிரசன்ன ரணதுங்க, 10.30 மணிக்கு பின்னர் எந்த கேள்விக்கும் பதிலளிக்க மட்டோம். நீங்கள் விரும்பியதை செய்துகொள்ளுங்கள். எதிர்த் தரப்பினருக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை விளித்து பேசியிருந்தாாா். அதன் பின்னர் பிரதி சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக செயற்படவேண்டும். சபை முதல்வர் கூறியது  போன்று ஒரு மணிநேரமே கேள்விகளுக்காக ஒக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஒரு மணிநேரம் முடிவடைந்து விட்டது. அதனால், தேவையில்லாத விடயங்களுக்கு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவித்திருந்தாா்.தொடர்ந்து நளின் பண்டார எம்.பி. பிங்கிரிய பிரதேச சபையில் பொஜன பெரமுனவின் கூட்டங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து இதற்கு  என்ன நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, அவர் பொருத்தமற்றவகையில் கேள்வி எழுப்புவதாக தெரிவித்து ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனா். அதனை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரச்சினைக்கு பொருத்தமற்ற வினாக்களை கேட்கிறார்கள். சபை அமர்வை முன்னெடுக்க முடியாவிட்டால் சபையை ஒத்திவைக்குமாறு பிரதி சபாநாயகருக்கு அறிவித்துவிட்டு பிரதமர் வெளியேறியிருந்தார். கேள்வி கேட்பதற்கு தமக்கு உரிய நேரம் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் அமைதியற்ற வகையில் செயற்பட்டதால், அதிருப்தியடைந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 10 நிமிடங்களின் பின்னர்  மீண்டும் சபை கூடியது. சபை தலைமை பீடத்துக்கு அருகில் வந்து பிரதி சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இன்றைய அமர்விலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தாா். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சபையிலிருந்து வெளியேறினர்

Advertisement

Advertisement

Advertisement