• Apr 26 2024

நாட்டில் நெல் விலை குறைப்பு- மஹிந்த எடுத்த திடீர் முடிவு!

Sharmi / Dec 7th 2022, 12:51 pm
image

Advertisement

நெல் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 20,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த உரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எப்பாவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரிசி இறக்குமதி மற்றும் நுகர்வு குறைவினால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நாட்டில் நெல் விலை குறைப்பு- மஹிந்த எடுத்த திடீர் முடிவு நெல் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதேவேளை, 20,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த உரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.எப்பாவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.எவ்வாறாயினும் அரிசி இறக்குமதி மற்றும் நுகர்வு குறைவினால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement