• Jul 06 2025

இறுதிச்சடங்கில் வெறியாட்டம் :ஒருவர் பலி-மஹியங்கனையில் பரபரப்பு!

Thansita / Jul 5th 2025, 10:56 am
image

மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில், 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

மேலும் 20 வயதுடைய மற்றொரு நபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவரின் உறவுக்கார சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதிச்சடங்கில் வெறியாட்டம் :ஒருவர் பலி-மஹியங்கனையில் பரபரப்பு மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில், 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும் 20 வயதுடைய மற்றொரு நபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்தவரின் உறவுக்கார சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.45 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement