• Nov 10 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 350 ஐயும் நிச்சயம் பெற்றுகொடுப்போம்- இ.தொ.கா. உறுதி!

Tamil nila / Sep 15th 2024, 6:59 am
image

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு  களுத்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

"1350 ரூபா சம்பள உயர்வை இ.தொ.கா. பெற்றுக்கொடுத்துள்ளது. விரைவில் 350 ரூபா கொடுப்பனவையும் பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுகளையும் மேற்கொள்ளவுள்ளது. அதனை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்கள் எஞ்சியுள்ள 350 ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முற்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இ.தொ.கா. தயாராகவுள்ளது. அதனை விமர்சிப்பவர்கள் பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காக்கும் பட்சத்தில் அதனை இ.தொ.கா. பெற்றுக்கொடுக்கும்." - என்றும் செந்தில் தொண்டமான் இந்தப் பிரசாரத்தில் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 350 ஐயும் நிச்சயம் பெற்றுகொடுப்போம்- இ.தொ.கா. உறுதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டார்.ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு  களுத்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே அவர் இதனை வெளியிட்டுள்ளார்."1350 ரூபா சம்பள உயர்வை இ.தொ.கா. பெற்றுக்கொடுத்துள்ளது. விரைவில் 350 ரூபா கொடுப்பனவையும் பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுகளையும் மேற்கொள்ளவுள்ளது. அதனை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்கள் எஞ்சியுள்ள 350 ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முற்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க இ.தொ.கா. தயாராகவுள்ளது. அதனை விமர்சிப்பவர்கள் பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காக்கும் பட்சத்தில் அதனை இ.தொ.கா. பெற்றுக்கொடுக்கும்." - என்றும் செந்தில் தொண்டமான் இந்தப் பிரசாரத்தில் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement