• May 19 2024

ரூபாவின் பெறுமதி மீண்டும் குறையும்: சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனம் எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 10th 2023, 6:54 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஐந்தில் ஒருபங்கு இந்த ஆண்டு இறுதியில் சரிவை சந்திக்கக்கூடுமென சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான 'பிட்ச் ரேட்டிங்' அறிவித்துள்ளது. 


சீனாவின் நிதியியல் உத்தரவாதத்தைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வெகுவிரைவில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.


இவ்வாறானதொரு பின்னணியில் இந்த வருடத்தில் இரண்டாம் காலாண்டில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறுமென நம்புவதாக தெரிவித்துள்ள 'பிட்ச் ரேட்டிங்' குழுமத்தின் ஓரங்கமான 'பிட்ச் சொலியூஷன்ஸ்', சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்ளூராட்சிமன்றத்தேர்தல் ஆகியவற்றுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்துடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பேணுவதில் இலங்கை அரசாங்கம் சவால்களை சந்திப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக வரி வீதங்களை அதிகரித்திருப்பதுடன், ரூபாவின் மீதான அழுத்தத்தைத் தளர்த்தியுள்ளது.


அதன்படி இலங்கை மீளச்செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருப்பதுடன், எதிர்வரும் சில மாதங்களில் அதன் வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இது நாணயணமாற்று வீதத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் 'பிட்ச் சொலியூஷன்ஸ்' தெரிவித்துள்ளது.


ரூபாவின் பெறுமதி மீண்டும் குறையும்: சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனம் எச்சரிக்கை SamugamMedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஐந்தில் ஒருபங்கு இந்த ஆண்டு இறுதியில் சரிவை சந்திக்கக்கூடுமென சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான 'பிட்ச் ரேட்டிங்' அறிவித்துள்ளது. சீனாவின் நிதியியல் உத்தரவாதத்தைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வெகுவிரைவில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது.இவ்வாறானதொரு பின்னணியில் இந்த வருடத்தில் இரண்டாம் காலாண்டில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெறுமென நம்புவதாக தெரிவித்துள்ள 'பிட்ச் ரேட்டிங்' குழுமத்தின் ஓரங்கமான 'பிட்ச் சொலியூஷன்ஸ்', சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்ளூராட்சிமன்றத்தேர்தல் ஆகியவற்றுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்துடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பேணுவதில் இலங்கை அரசாங்கம் சவால்களை சந்திப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக வரி வீதங்களை அதிகரித்திருப்பதுடன், ரூபாவின் மீதான அழுத்தத்தைத் தளர்த்தியுள்ளது.அதன்படி இலங்கை மீளச்செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருப்பதுடன், எதிர்வரும் சில மாதங்களில் அதன் வெளிநாட்டுக்கையிருப்பை மீளக்கட்டியெழுப்பவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இது நாணயணமாற்று வீதத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் 'பிட்ச் சொலியூஷன்ஸ்' தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement