அமெரிக்கா உக்ரேனுக்குக் கூடுதல் இராணுவ உதவியாக மேலும் 2.6 பில்லியன் டொலர் வழங்க உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாஸ்கோவின் துருப்புகளுக்கு எதிராக வசந்த காலத்தில் கீவ் மேற்கொள்ளவிருக்கும் தாக்குதலுக்கு முன்னரே அந்த உதவி அது வழங்கப்படவுள்ளது.
ஆயுதங்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க அனுமதிக்கும் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கையிருப்பிலிருந்து ஆயுதங்களை நேரடியாகப் பெறுவதற்குப் பதிலாகவே அவ்வாறு செய்யப்படுகின்றது.
நெடுந்தொலைவு ஆயுதங்களை வழங்குவது உக்ரேனுக்கு உதவக்கூடும் என்றும் கவனிப்பாளர்கள் கூறியுள்ளதுடன், தாக்க இயலாத தொலைவில் இருக்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைக்க அது வகைசெய்யும் எனவும் கூறியுள்ளனர்.
ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் மேலும் அதிகமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டால், அது கீவின் பதிலடித் தாக்குதல்களை மேலும் பயனுள்ளதாக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இதுவரை உக்ரேனுக்குப் பாதுகாப்பு உதவியாகச் சுமார் 35 பில்லியன் டொலர் பெறுமதியான உதவியை வழங்க பைடன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
உக்ரேனுக்கு அதிகளவான நிதியுதவியை வாஷிங்டனும் அதற்கு அடுத்த நிலையில் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாக்கு ஏற்பட்ட சிக்கல். உக்ரேனுக்குக் கூடுதல் இராணுவ உதவி வழங்கவுள்ள முக்கிய நாடுsamugammedia அமெரிக்கா உக்ரேனுக்குக் கூடுதல் இராணுவ உதவியாக மேலும் 2.6 பில்லியன் டொலர் வழங்க உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாஸ்கோவின் துருப்புகளுக்கு எதிராக வசந்த காலத்தில் கீவ் மேற்கொள்ளவிருக்கும் தாக்குதலுக்கு முன்னரே அந்த உதவி அது வழங்கப்படவுள்ளது.ஆயுதங்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க அனுமதிக்கும் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்கக் கையிருப்பிலிருந்து ஆயுதங்களை நேரடியாகப் பெறுவதற்குப் பதிலாகவே அவ்வாறு செய்யப்படுகின்றது. நெடுந்தொலைவு ஆயுதங்களை வழங்குவது உக்ரேனுக்கு உதவக்கூடும் என்றும் கவனிப்பாளர்கள் கூறியுள்ளதுடன், தாக்க இயலாத தொலைவில் இருக்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைக்க அது வகைசெய்யும் எனவும் கூறியுள்ளனர். ரஷ்யர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் மேலும் அதிகமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டால், அது கீவின் பதிலடித் தாக்குதல்களை மேலும் பயனுள்ளதாக்கும் என்றும் நம்பப்படுகின்றது.இதுவரை உக்ரேனுக்குப் பாதுகாப்பு உதவியாகச் சுமார் 35 பில்லியன் டொலர் பெறுமதியான உதவியை வழங்க பைடன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.உக்ரேனுக்கு அதிகளவான நிதியுதவியை வாஷிங்டனும் அதற்கு அடுத்த நிலையில் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.