• Nov 26 2024

உக்கிரமடைந்து வரும் ரஸ்ய உக்ரைன் யுத்தம் - புடின் சீற்றம்..!samugammedia

Tamil nila / Dec 15th 2023, 7:10 pm
image

எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரஸ்ய உக்ரைன் போர் நீடித்து வருகின்றது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.

ரஸ்ய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி செய்து வருகிறார்கள்.

அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி உதவி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புடின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உக்கிரமடைந்து வரும் ரஸ்ய உக்ரைன் யுத்தம் - புடின் சீற்றம்.samugammedia எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரஸ்ய உக்ரைன் போர் நீடித்து வருகின்றது.ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர்.எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.ரஸ்ய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி செய்து வருகிறார்கள்.அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி உதவி செய்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புடின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement