• Jul 05 2025

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்ய இராணுவம் தாக்குதல்!

Thansita / Jul 5th 2025, 11:45 am
image

உக்ரைன் மீது இதுவரை இல்லாத வகையில், ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் மூன்றாண்டைக் கடந்த நிலையில், சமாதான முயற்சிகள் தொடர்ந்தும் வெற்றி பெறவில்லை. 

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் சமாதானம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. துருக்கியில் இரு நாட்டு பிரதிநிதிகள் இருமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதும், இம்முயற்சிகள் நிலைத்த அமைதியைக் கொண்டுவர முடியவில்லை.

மாறாக, சமீபத்திய இந்த தாக்குதல், போர் மேலும் தீவிரமடைவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீவ், கார்கிவ், சுமி, செர்னிகிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு, ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. 

இரவு முழுவதும் நீடித்த இந்த தாக்குதலில், சுமார் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போர் தொடங்கி மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில், இது வரை இல்லாத அளவிலான இத்தகைய தாக்குதல், நிலைமை மேலும் கடுமையடையக் காரணமாகிறது.


உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு ரஷ்ய இராணுவம் தாக்குதல் உக்ரைன் மீது இதுவரை இல்லாத வகையில், ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் மூன்றாண்டைக் கடந்த நிலையில், சமாதான முயற்சிகள் தொடர்ந்தும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் சமாதானம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. துருக்கியில் இரு நாட்டு பிரதிநிதிகள் இருமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதும், இம்முயற்சிகள் நிலைத்த அமைதியைக் கொண்டுவர முடியவில்லை.மாறாக, சமீபத்திய இந்த தாக்குதல், போர் மேலும் தீவிரமடைவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.கீவ், கார்கிவ், சுமி, செர்னிகிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு, ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இரவு முழுவதும் நீடித்த இந்த தாக்குதலில், சுமார் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கி மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையில், இது வரை இல்லாத அளவிலான இத்தகைய தாக்குதல், நிலைமை மேலும் கடுமையடையக் காரணமாகிறது.

Advertisement

Advertisement

Advertisement