பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்த ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளையில் தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுவெல்பிட்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (19) காலை 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய பெண் தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்குச் சொந்தமான சொகுசு பஸ்ஸில் பதுளைக்குச் சென்றுள்ள நிலையில் எல்ல பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக ரயிலில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போது, பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் மரணம் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்த ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளையில் தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுவெல்பிட்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (19) காலை 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ரஷ்ய பெண் தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்குச் சொந்தமான சொகுசு பஸ்ஸில் பதுளைக்குச் சென்றுள்ள நிலையில் எல்ல பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக ரயிலில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போது, பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.