• May 06 2025

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்; இதுவரை 8 பேர் கைது! 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Chithra / May 6th 2025, 8:48 am
image


சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பல்கலைக்கழகத்தின் மேலும் 4 மாணவர்கள் நேற்று சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், மாணவனின் மரணம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரும்,

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவெளை கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார். 

பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனிடையே, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணித்த சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் முன்வைக்கப்படும் சமர்ப்பணங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

 

  

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்; இதுவரை 8 பேர் கைது 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பல்கலைக்கழகத்தின் மேலும் 4 மாணவர்கள் நேற்று சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும், மாணவனின் மரணம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரும்,பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவெளை கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார். பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணித்த சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் முன்வைக்கப்படும் சமர்ப்பணங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement