• Nov 24 2024

சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Anaath / Jul 23rd 2024, 10:26 am
image

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை  அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப மோதலில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக  வயதுடய  குடும்பஸ்தர்  ஒருவர் மரணமடைந்திருந்தார்.

தனது மகளின் கணவர் தாக்கியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது  62 வயதுடய  மீராசாயிப் சின்னராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய றிஸ்வி முகமட் அன்சார்  தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அடிக்கடி இவ்விடயம் தொடர்பாக – தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன்  குறித்த வழக்கு நேற்றையதினம் (22) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களை ஆராய்ந்த பின்னர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சாய்ந்தமருது கொலை சம்பவம்- பிரதான சந்தேக நபர் உட்பட ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை  அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப மோதலில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக  வயதுடய  குடும்பஸ்தர்  ஒருவர் மரணமடைந்திருந்தார்.தனது மகளின் கணவர் தாக்கியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.இதன்போது  62 வயதுடய  மீராசாயிப் சின்னராசா என்பவரே உயிரிழந்தவராவார்.இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய றிஸ்வி முகமட் அன்சார்  தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இச்சம்பவத்தில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் அடிக்கடி இவ்விடயம் தொடர்பாக – தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அத்துடன்  குறித்த வழக்கு நேற்றையதினம் (22) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களை ஆராய்ந்த பின்னர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement