• May 07 2024

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா...!samugammedia

Sharmi / Feb 13th 2024, 2:04 pm
image

Advertisement

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரு விழா கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது. 

இதில் கணிதப்பூங்கா திறத்தல், சிறுவர் பூங்கா திறத்தல், வைபவ ரீதியான உயர்தர கலைப்பிரிவு ஆரம்பித்தல், பாடசாலை உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்தல் மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2022(2023) முடிவுகளின் அடிப்படையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்தல் என்பன இவ் ஐம்பெரும் விழாக்களில் இடம்பெற்றிருந்தது. 

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி கல்முனை கல்வி வலய நிருவாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர், கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வி.ஜிஹானா ஆலிப், கணித பாடத்துக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவுக் கோட்டத்துக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் இஸ்ஸத் கலந்து கொண்டிருந்தனர். 

இந்நிகழ்வில் சிறந்த பெறுபேறுகளைக்பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு 'கையில காசு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூட உத்தியோகத்தர் ஹாரூன் அவர்களால் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரும் விழா.samugammedia சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஐம்பெரு விழா கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கணிதப்பூங்கா திறத்தல், சிறுவர் பூங்கா திறத்தல், வைபவ ரீதியான உயர்தர கலைப்பிரிவு ஆரம்பித்தல், பாடசாலை உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்தல் மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2022(2023) முடிவுகளின் அடிப்படையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்தல் என்பன இவ் ஐம்பெரும் விழாக்களில் இடம்பெற்றிருந்தது. பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி கல்முனை கல்வி வலய நிருவாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர், கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வி.ஜிஹானா ஆலிப், கணித பாடத்துக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவுக் கோட்டத்துக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் இஸ்ஸத் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் சிறந்த பெறுபேறுகளைக்பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு 'கையில காசு' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூட உத்தியோகத்தர் ஹாரூன் அவர்களால் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement