• Jan 19 2025

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சஜித் வலியுறுத்து

Chithra / Jan 17th 2025, 8:25 am
image

 

நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கும் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைப் பிரதானிகளிடமும்  தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 05 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 

பதிவாகியிருப்பது பாரதூரமான நிலைமை என்பதை நான் முதலில் சுட்டிக்காட்டுகின்றேன். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்து, மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் சிவில் பிரஜைகள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்கள புள்ளிவிபரங்களின் படி, வெளிநாடு சென்றுள்ளவர்களில் 188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில், இவ்வாறான பரிதாபகரமான சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கும் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைப் பிரதானிகளிடமும்  தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிலை அதிகரிக்குமானால், அது சாதாரண மக்களின் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கும்,மக்களுக்கு சுதந்திரமாக தமது  நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தடங்கலான  காரணமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

எனவே, இந்த பாதாள உலக செயற்பாடுகளை உடனடியாக ஒழிப்பதற்கும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு இவற்றை வழிநடத்தும் நபர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம்  கேட்டுக்கொள்கிறேன்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சஜித் வலியுறுத்து  நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கும் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைப் பிரதானிகளிடமும்  தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 05 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருப்பது பாரதூரமான நிலைமை என்பதை நான் முதலில் சுட்டிக்காட்டுகின்றேன். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்து, மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் சிவில் பிரஜைகள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.பொலிஸ் திணைக்கள புள்ளிவிபரங்களின் படி, வெளிநாடு சென்றுள்ளவர்களில் 188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.மன்னார் நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில், இவ்வாறான பரிதாபகரமான சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கும் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைப் பிரதானிகளிடமும்  தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.இந்நிலை அதிகரிக்குமானால், அது சாதாரண மக்களின் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கும்,மக்களுக்கு சுதந்திரமாக தமது  நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தடங்கலான  காரணமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.எனவே, இந்த பாதாள உலக செயற்பாடுகளை உடனடியாக ஒழிப்பதற்கும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு இவற்றை வழிநடத்தும் நபர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம்  கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

Advertisement

Advertisement