• May 19 2024

உணவின்றி, தவிக்கும் மக்கள் - நட்சத்திர ஓட்டல்களில் சுகபோகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்- சஜித் கண்டனம்!

Tamil nila / Dec 22nd 2022, 9:26 pm
image

Advertisement

தற்போது நம் நாட்டில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மருத்துவமனைகளிலும் போலவே  மருந்தகங்களிலும் கூட மருந்துகள் இல்லை எனவும்,அவ்வாறு மருந்தின்றி முதியவர்கள்,தாய்மார்கள்,குழந்தைகள் போன்ற குடிமக்களை எவ்வாறு பாதுகாப்பது? என தான் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,பணம் கொடுத்து மருந்து வாங்குவதற்கும் பற்றாக்குறையாக உள்ள சந்தர்ப்பத்தில் மருந்து விலையும் கூடியளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


ஆட்சியாளர்களுக்கு இது எதுவுமே புரிவதில்லை எனவும்,தேவைக்கேற்ப அவர்களுக்கு மருந்து மற்றும் உணவு கிடைப்பதால் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும்,இந்த விடுமுறையில் அமைச்சர்கள் 7 நட்சத்திர ஓட்டல்களில் பொழுதைக் கழிப்பதாகவும்,உடல் நலம் பாதிக்கப்பட்டால் 7 நட்சத்திர மருத்துவமனைகளுக்கு செல்வதாகவும், மக்கள் படும் துன்பங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 39 இலட்சம் ரூபா பெறுமதியான Dialysis இயந்திரம் வழங்கும் நிகழ்வில் இன்று (22) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் "மூச்சு" வேலைத்திட்டத்தின் 54 ஆவது கட்டமாகவே இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்டது.


இதற்கு முன்னர் 53 கட்டங்களில் 160,266,900 இலட்சம் மதிப்பிலான மருத்துவமனை உபகரணங்களை "மூச்சு"திட்டத்தின் மூலம் வழங்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்துள்ளது.


இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம், மருத்துவமனை பனிப்பாளர்கள் கூட, முடிந்தவரை பல்வேறு அறுவை சிகிச்சைகளை கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்றும்,அதற்குத் தேவையான மயக்க மருந்து கூட கிடைக்காதது உச்சகட்டப் பிரச்சினை எனவும்,சுகாதார அமைச்சு ஊழல் மிகுந்ததாக அமைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும்,சில விலைமனுகோரல்கள் கூட 11 மாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மத்திய வங்கியின் அறிக்கைகளின் பிரகாரம், மருந்துக்கு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் டொலர்கள் செலவாகிய போதிலும், தற்போதைய தலைவர்களால் அந்த தொகையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளதாகவும், மருந்துகளில் கூட திருடுவதற்கு அவர்கள் பழகிவிட்டதாகவும், இந்நிலையை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும்,அவ்வாறான கொமிஸ்காரர்களுக்கும் கூலிப்படையினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அவ்வாறே,மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரம் இல்லா விட்டாலும், நன்கொடையாளர்கள் மூலம் வசதிகள் மற்றும் வளங்களைப் பெறுவதற்கான இயலுமைகள்  இருப்பதால், இந்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு பல மில்லியன் கணக்கான மருத்துவப் பொருட்களை வழங்க முடிந்ததாகவும்,பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் குணமடைந்ததைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவின்றி, தவிக்கும் மக்கள் - நட்சத்திர ஓட்டல்களில் சுகபோகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்- சஜித் கண்டனம் தற்போது நம் நாட்டில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மருத்துவமனைகளிலும் போலவே  மருந்தகங்களிலும் கூட மருந்துகள் இல்லை எனவும்,அவ்வாறு மருந்தின்றி முதியவர்கள்,தாய்மார்கள்,குழந்தைகள் போன்ற குடிமக்களை எவ்வாறு பாதுகாப்பது என தான் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,பணம் கொடுத்து மருந்து வாங்குவதற்கும் பற்றாக்குறையாக உள்ள சந்தர்ப்பத்தில் மருந்து விலையும் கூடியளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.ஆட்சியாளர்களுக்கு இது எதுவுமே புரிவதில்லை எனவும்,தேவைக்கேற்ப அவர்களுக்கு மருந்து மற்றும் உணவு கிடைப்பதால் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும்,இந்த விடுமுறையில் அமைச்சர்கள் 7 நட்சத்திர ஓட்டல்களில் பொழுதைக் கழிப்பதாகவும்,உடல் நலம் பாதிக்கப்பட்டால் 7 நட்சத்திர மருத்துவமனைகளுக்கு செல்வதாகவும், மக்கள் படும் துன்பங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 39 இலட்சம் ரூபா பெறுமதியான Dialysis இயந்திரம் வழங்கும் நிகழ்வில் இன்று (22) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் "மூச்சு" வேலைத்திட்டத்தின் 54 ஆவது கட்டமாகவே இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்டது.இதற்கு முன்னர் 53 கட்டங்களில் 160,266,900 இலட்சம் மதிப்பிலான மருத்துவமனை உபகரணங்களை "மூச்சு"திட்டத்தின் மூலம் வழங்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்துள்ளது.இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம், மருத்துவமனை பனிப்பாளர்கள் கூட, முடிந்தவரை பல்வேறு அறுவை சிகிச்சைகளை கட்டுப்படுப்படுத்த வேண்டும் என்றும்,அதற்குத் தேவையான மயக்க மருந்து கூட கிடைக்காதது உச்சகட்டப் பிரச்சினை எனவும்,சுகாதார அமைச்சு ஊழல் மிகுந்ததாக அமைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும்,சில விலைமனுகோரல்கள் கூட 11 மாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.மத்திய வங்கியின் அறிக்கைகளின் பிரகாரம், மருந்துக்கு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் டொலர்கள் செலவாகிய போதிலும், தற்போதைய தலைவர்களால் அந்த தொகையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளதாகவும், மருந்துகளில் கூட திருடுவதற்கு அவர்கள் பழகிவிட்டதாகவும், இந்நிலையை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும்,அவ்வாறான கொமிஸ்காரர்களுக்கும் கூலிப்படையினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.அவ்வாறே,மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரம் இல்லா விட்டாலும், நன்கொடையாளர்கள் மூலம் வசதிகள் மற்றும் வளங்களைப் பெறுவதற்கான இயலுமைகள்  இருப்பதால், இந்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு பல மில்லியன் கணக்கான மருத்துவப் பொருட்களை வழங்க முடிந்ததாகவும்,பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் குணமடைந்ததைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement