• Nov 25 2024

நாட்டின் தலைவராக சஜித் பிரேமதாசவே பொருத்தமானவர்..! நளின் பண்டார சுட்டிக்காட்டு...! samugammedia

Sharmi / Jan 4th 2024, 3:31 pm
image

தனியொருவனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.நாட்டின் தலைவராக வருபவர் சரியான பொருளாதார மற்றும் நிர்வாகப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். சஜித் பிரேமதாசவை அத்தகைய தலைவராக பெயரிடலாம். அதிகாரத்தைப் பெற மக்களை அவர் அடமானம் வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சஜித் பிரேமதாசவிடம் சரியான வேலைத்திட்டம் இருப்பதாகவும்,அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சஜித் பிரேமதாசவுடன் திறமையான குழுவொன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விருந்த பல முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களை கட்சி நிராகரித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்குப் பொருந்தாதவ்கள், குற்றம் சாட்டப்படாதவர்கள்,ஊழல்வாதிகள் அற்ற மற்றும் இன மத வாதங்கள் இல்லாதவர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய முற்போக்கு தரப்பினரை இதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி உருவாக்கும் அரசாங்கத்தில் நியாயமற்ற வரிக் கொள்கை திருத்தப்படும் என்றும்,ஐக்கிய மக்கள் சக்தி சரியான பொருளாதாரப் பார்வையைக் கொண்ட குழுவைக் கொண்டிருப்பதாகவும், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வரிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஊடாகச் செயற்படுவதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.

2024 ஆம் புத்தாண்டை ஒளிரச்செய்ய தற்போதைய அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்றும்,நாட்டை வங்குரோத்தடையச் செய்த குழுவினரே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி செய்து வருவதுடன்,நாட்டையும் மக்களையும் வங்குரோத்தாக்கிய குழுவினரை பாதுகாக்கும்  பக்க பலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு VATக்கு உட்பட்ட 97 வகைகளை சேர்ந்த அத்தியாவசிய பொருட்களுக்கு 18% VAT ஐ சேர்த்து 15% இல் இருந்து 18% ஆக அதிகரித்தமையால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

அரச சேவை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட முழு நாட்டு மக்களும் VAT அதிகரிப்பால் நெருக்கடிகளில் விழுந்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் நாட்டை வங்குரோத்தாக்கிய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த அணியில் ரணில் விக்ரமசிங்கவை சேர்த்ததுதான் மாற்றம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிய அதிகாரத்தை வைத்து நாட்டை வங்குரோத்து செய்த குழு இன்று வலுப்பெற்றுள்ளது.ஆனால் நாட்டு மக்களுக்கு  அந்த பக்க பலம் கிடைக்கவில்லை.

கோட்டாபய போன்ற ஒரு தவறான நபரை நாட்டின் தலைவராக தெரிவு செய்தால் நாட்டை மீட்க முடியாத நிலை ஏற்படும்.2024 இல் சரியான தீர்மானத்தை எடுப்போம்.

மக்களுக்காக என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச அவர்களே,2024 ஆம் ஆண்டு உருவாக்கப்படும் பரந்த கூட்டணியின் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். 

ஏப்ரலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுத் தேர்தலுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.இந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெறும். ஐக்கிய மக்கள் சக்திக்கு மட்டுமே அடிமட்ட மட்டத்தில் பாரிய பொறிமுறை கட்டமைப்பு உள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா,எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் கட்டமைப்பிற்கு புறம்பாக நாங்கள் செயற்பட மாட்டோம்.இந்த குழுவிற்கு வந்து நாலக கொடஹேவா போன்ற பொருளாதாரம் குறித்த அறிவு உள்ளவர்கள் முன்மொழிவுகளை முன்வைக்கலாம்.

புதிய மின்சார சட்டத்தின் மூலம் இலங்கை மின்சார சபை பல பகுதிகளாக உடைத்து மறுசீரமைக்க முயற்சிக்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல.ஆனால் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் ஜே.வி.பி ரஞ்சன் ஜயலல்ல ஆகியோர் கொண்டு வந்த மறுசீரமைப்பிற்கே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை காட்டுகிறது. மக்களுக்கு ஏற்புடைய மின்கட்டண திருத்தம்  கொண்டுவந்தால்,ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்காது.தன்னிச்சையாக கொண்டு வரும் மின் கட்டணத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காது.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான நிலைய ஊழியர்கள் கூட்டு தொழில் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.இதில் ஈடுபட்ட 28 பேரை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கட்டாய விடுமுறையில் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். அரசாங்கம் தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தை மூலம் கையாள வேண்டும்,இங்கு அந்த வழிமுறை பின்பற்றப்படாது அடக்குமுறை கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், அரசாங்கம் தொழிற்சங்கங்களை கையாள்கிறது.இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

நாட்டின் தலைவராக சஜித் பிரேமதாசவே பொருத்தமானவர். நளின் பண்டார சுட்டிக்காட்டு. samugammedia தனியொருவனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.நாட்டின் தலைவராக வருபவர் சரியான பொருளாதார மற்றும் நிர்வாகப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். சஜித் பிரேமதாசவை அத்தகைய தலைவராக பெயரிடலாம். அதிகாரத்தைப் பெற மக்களை அவர் அடமானம் வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்தார்.நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சஜித் பிரேமதாசவிடம் சரியான வேலைத்திட்டம் இருப்பதாகவும்,அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சஜித் பிரேமதாசவுடன் திறமையான குழுவொன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விருந்த பல முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களை கட்சி நிராகரித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்குப் பொருந்தாதவ்கள், குற்றம் சாட்டப்படாதவர்கள்,ஊழல்வாதிகள் அற்ற மற்றும் இன மத வாதங்கள் இல்லாதவர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய முற்போக்கு தரப்பினரை இதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி உருவாக்கும் அரசாங்கத்தில் நியாயமற்ற வரிக் கொள்கை திருத்தப்படும் என்றும்,ஐக்கிய மக்கள் சக்தி சரியான பொருளாதாரப் பார்வையைக் கொண்ட குழுவைக் கொண்டிருப்பதாகவும், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத வரிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஊடாகச் செயற்படுவதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.2024 ஆம் புத்தாண்டை ஒளிரச்செய்ய தற்போதைய அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்றும்,நாட்டை வங்குரோத்தடையச் செய்த குழுவினரே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி செய்து வருவதுடன்,நாட்டையும் மக்களையும் வங்குரோத்தாக்கிய குழுவினரை பாதுகாக்கும்  பக்க பலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.ரணில் ராஜபக்ச அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு VATக்கு உட்பட்ட 97 வகைகளை சேர்ந்த அத்தியாவசிய பொருட்களுக்கு 18% VAT ஐ சேர்த்து 15% இல் இருந்து 18% ஆக அதிகரித்தமையால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.அரச சேவை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட முழு நாட்டு மக்களும் VAT அதிகரிப்பால் நெருக்கடிகளில் விழுந்துள்ளனர்.தற்போதைய அரசாங்கம் நாட்டை வங்குரோத்தாக்கிய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த அணியில் ரணில் விக்ரமசிங்கவை சேர்த்ததுதான் மாற்றம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கிய அதிகாரத்தை வைத்து நாட்டை வங்குரோத்து செய்த குழு இன்று வலுப்பெற்றுள்ளது.ஆனால் நாட்டு மக்களுக்கு  அந்த பக்க பலம் கிடைக்கவில்லை.கோட்டாபய போன்ற ஒரு தவறான நபரை நாட்டின் தலைவராக தெரிவு செய்தால் நாட்டை மீட்க முடியாத நிலை ஏற்படும்.2024 இல் சரியான தீர்மானத்தை எடுப்போம்.மக்களுக்காக என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச அவர்களே,2024 ஆம் ஆண்டு உருவாக்கப்படும் பரந்த கூட்டணியின் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ஏப்ரலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுத் தேர்தலுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.இந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெறும். ஐக்கிய மக்கள் சக்திக்கு மட்டுமே அடிமட்ட மட்டத்தில் பாரிய பொறிமுறை கட்டமைப்பு உள்ளது.கலாநிதி ஹர்ஷ டி சில்வா,எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் கட்டமைப்பிற்கு புறம்பாக நாங்கள் செயற்பட மாட்டோம்.இந்த குழுவிற்கு வந்து நாலக கொடஹேவா போன்ற பொருளாதாரம் குறித்த அறிவு உள்ளவர்கள் முன்மொழிவுகளை முன்வைக்கலாம்.புதிய மின்சார சட்டத்தின் மூலம் இலங்கை மின்சார சபை பல பகுதிகளாக உடைத்து மறுசீரமைக்க முயற்சிக்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல.ஆனால் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் ஜே.வி.பி ரஞ்சன் ஜயலல்ல ஆகியோர் கொண்டு வந்த மறுசீரமைப்பிற்கே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை காட்டுகிறது. மக்களுக்கு ஏற்புடைய மின்கட்டண திருத்தம்  கொண்டுவந்தால்,ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்காது.தன்னிச்சையாக கொண்டு வரும் மின் கட்டணத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காது.ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான நிலைய ஊழியர்கள் கூட்டு தொழில் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.இதில் ஈடுபட்ட 28 பேரை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கட்டாய விடுமுறையில் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். அரசாங்கம் தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தை மூலம் கையாள வேண்டும்,இங்கு அந்த வழிமுறை பின்பற்றப்படாது அடக்குமுறை கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், அரசாங்கம் தொழிற்சங்கங்களை கையாள்கிறது.இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement