• May 19 2024

சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு! samugammedia

Tamil nila / Jul 29th 2023, 11:10 pm
image

Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக நிலவிவரும் நட்புறவு ரீதியிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இருதரப்பினரும் கவனம் செலுத்தியதோடு,(JAICA) மற்றும் (JBIC) கடன் உதவித் திட்டங்களின் கீழ் இலங்கை குடியரசிற்கும் அதன் மக்களுக்கும் ஜப்பான் மனப்பூர்வமாக வழங்கியுள்ள உதவிகள் ஒத்துழைப்புகள் குறித்தும்,ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை,இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனம் மற்றும் ஜப்பானில் இருந்து பெறப்பட்ட பெறுமதிமிக்க தேசிய சொத்துக்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

குறுகிய அரசியல் தீர்மானங்களினால் இலகு ரயில் திட்டம் (LRT) இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனது அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஜப்பானுடன் கைகோர்க்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் நேர்மறையான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்,ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றை மிகவும் போற்றுவதாகவும், இலங்கை தேசத்தை அத்தகைய பண்புகளுடன் சித்தப்படுத்துவதற்குத் தேவையான உன்னத மாண்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதிலும் தமது அரசாங்கத்தின் கீழ் கவனம் செலுத்துவதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு முன்பாக தெரிவித்தார்.

தற்போது,நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 1.4% மட்டுமே பங்களிக்கும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தேவையான ஜப்பனிய தொழில்நுட்பத்தை வழங்குமாறும் எதிர்ககட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.EEZ விசேட பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள 200 கடல் மைல் பரப்பளவில் தீவு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் கடல் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உரிய முறையில் பங்களிப்பைப்பெறச் செய்யயும் தனது தொலைநோக்குப் பார்வையையும் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே,தகவல் தொழில்நுட்பப் (IT) புரட்சியானது நகரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால்,அந்தத் தொழில்நுட்பத்தின் மரபுரிமை இன்னமும் கிராமத்துப் பிள்ளைகளுக்கு உரித்துடையதாகவில்லை என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச அவர்கள், கிராமத்தில் உள்ள திறமையான பிள்ளைகளும் தொழில்நுட்ப உலகில் முன்னேறத் தேவையான தொழில்நுட்ப வசதிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோட்டுக்கொண்டார்.

நாடு விழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்பதற்குத் தேவையான வழங்க முடியுமான சகலவிதமான ஒத்துழைப்பையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், குறித்த ஒத்துழைப்புகளின் பயன்பாடு மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க பங்களிக்குமாறும் ஜப்பானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு samugammedia எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக நிலவிவரும் நட்புறவு ரீதியிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இருதரப்பினரும் கவனம் செலுத்தியதோடு,(JAICA) மற்றும் (JBIC) கடன் உதவித் திட்டங்களின் கீழ் இலங்கை குடியரசிற்கும் அதன் மக்களுக்கும் ஜப்பான் மனப்பூர்வமாக வழங்கியுள்ள உதவிகள் ஒத்துழைப்புகள் குறித்தும்,ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை,இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனம் மற்றும் ஜப்பானில் இருந்து பெறப்பட்ட பெறுமதிமிக்க தேசிய சொத்துக்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.குறுகிய அரசியல் தீர்மானங்களினால் இலகு ரயில் திட்டம் (LRT) இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனது அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஜப்பானுடன் கைகோர்க்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் நேர்மறையான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்,ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றை மிகவும் போற்றுவதாகவும், இலங்கை தேசத்தை அத்தகைய பண்புகளுடன் சித்தப்படுத்துவதற்குத் தேவையான உன்னத மாண்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதிலும் தமது அரசாங்கத்தின் கீழ் கவனம் செலுத்துவதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு முன்பாக தெரிவித்தார்.தற்போது,நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 1.4% மட்டுமே பங்களிக்கும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தேவையான ஜப்பனிய தொழில்நுட்பத்தை வழங்குமாறும் எதிர்ககட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.EEZ விசேட பொருளாதார வலயத்தில் அமைந்துள்ள 200 கடல் மைல் பரப்பளவில் தீவு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் கடல் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உரிய முறையில் பங்களிப்பைப்பெறச் செய்யயும் தனது தொலைநோக்குப் பார்வையையும் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.அவ்வாறே,தகவல் தொழில்நுட்பப் (IT) புரட்சியானது நகரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால்,அந்தத் தொழில்நுட்பத்தின் மரபுரிமை இன்னமும் கிராமத்துப் பிள்ளைகளுக்கு உரித்துடையதாகவில்லை என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச அவர்கள், கிராமத்தில் உள்ள திறமையான பிள்ளைகளும் தொழில்நுட்ப உலகில் முன்னேறத் தேவையான தொழில்நுட்ப வசதிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோட்டுக்கொண்டார்.நாடு விழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்பதற்குத் தேவையான வழங்க முடியுமான சகலவிதமான ஒத்துழைப்பையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், குறித்த ஒத்துழைப்புகளின் பயன்பாடு மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க பங்களிக்குமாறும் ஜப்பானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement