• Oct 23 2024

மலையக மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழ்வதற்கான உரிமையினை வழங்குவேன் - சஜித் பிரேமதாச தெரிவிப்பு..!!

Tamil nila / May 1st 2024, 7:30 pm
image

Advertisement

மலையக மக்களுக்கு இலங்கையில் கௌரவமாக வாழ்வதற்காண உரிமையினை வழங்குவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திலன் போதே அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில்  மேலும் உரையாற்றுகையில், 

மலையக மக்களோடு தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்களது மொழி உரிமையை பாதுகாப்பேன். உங்களுக்கு காணி,வீட்டுரிமையை வழங்குவேன். மலையகத்தின் நகர,கிராமிய அபிவிருத்திக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன். உங்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பேன்.-  என தெரிவித்துள்ளார்.

மேலும் தோட்ட தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன். எனது தந்தை ரனசிங்க பிரேமதாசதான் உங்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினார். நான் உங்களை இலங்கையராக கௌரவமாக வாழும் உரிமையை உங்களுக்கு வழங்குவேன். திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் இணைந்து மலையக மக்களுக்கு காணி உரிமையையும் சிறு தேயிலை தோட்டங்களின் உரிமையாளராகும் உரிமையையும் வழங்குவேன். யாருக்கு அடிமையாகாமல்  1500 ரூபா,1700 ரூபா தரும் வரை காத்துக்கொண்டு இருக்காமல்  தேயிலை தோட்ட உரிமையாளராக வாழும் மூலதனத்தை பலத்தை உங்களுக்கு வழங்குவேன். -எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழ்வதற்கான உரிமையினை வழங்குவேன் - சஜித் பிரேமதாச தெரிவிப்பு. மலையக மக்களுக்கு இலங்கையில் கௌரவமாக வாழ்வதற்காண உரிமையினை வழங்குவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தலவாக்கலையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திலன் போதே அவர் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில்  மேலும் உரையாற்றுகையில், மலையக மக்களோடு தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்களது மொழி உரிமையை பாதுகாப்பேன். உங்களுக்கு காணி,வீட்டுரிமையை வழங்குவேன். மலையகத்தின் நகர,கிராமிய அபிவிருத்திக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன். உங்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பேன்.-  என தெரிவித்துள்ளார்.மேலும் தோட்ட தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன். எனது தந்தை ரனசிங்க பிரேமதாசதான் உங்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினார். நான் உங்களை இலங்கையராக கௌரவமாக வாழும் உரிமையை உங்களுக்கு வழங்குவேன். திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் இணைந்து மலையக மக்களுக்கு காணி உரிமையையும் சிறு தேயிலை தோட்டங்களின் உரிமையாளராகும் உரிமையையும் வழங்குவேன். யாருக்கு அடிமையாகாமல்  1500 ரூபா,1700 ரூபா தரும் வரை காத்துக்கொண்டு இருக்காமல்  தேயிலை தோட்ட உரிமையாளராக வாழும் மூலதனத்தை பலத்தை உங்களுக்கு வழங்குவேன். -எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement