• May 22 2024

வெலிக்கடை சிறையில் சஞ்சீவ, ஆனந்தவைப் பார்வையிட்ட சஜித்!

Chithra / Jan 25th 2023, 7:05 am
image

Advertisement

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் - ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த ஆகியோரைப் பார்வையிடும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றுப் பிற்பகல் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.

இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மின்சார நுகர்வோர்களுக்காக குறித்த இருவரும் துணிச்சலாக முன் நின்றார்கள் எனவும், அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக மேற்கொள்ள முடியுமான சகல சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்புகளுக்காக அவர்கள் முன்நிற்கவில்லை எனவும், இந்நாட்டின் சாதாரண மக்களுக்காகவே அவர்கள் முன்நின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சஞ்சீவ தம்மிக்க, ஆனந்த பாலித்த இருவரும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று (24) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிவான் வழங்கினார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வெலிக்கடை சிறையில் சஞ்சீவ, ஆனந்தவைப் பார்வையிட்ட சஜித் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் - ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த ஆகியோரைப் பார்வையிடும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றுப் பிற்பகல் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மின்சார நுகர்வோர்களுக்காக குறித்த இருவரும் துணிச்சலாக முன் நின்றார்கள் எனவும், அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக மேற்கொள்ள முடியுமான சகல சட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்புகளுக்காக அவர்கள் முன்நிற்கவில்லை எனவும், இந்நாட்டின் சாதாரண மக்களுக்காகவே அவர்கள் முன்நின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.சஞ்சீவ தம்மிக்க, ஆனந்த பாலித்த இருவரும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் நேற்று (24) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிவான் வழங்கினார்.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement