• Jul 27 2024

வீதி வீதியாக போதைப் பொருளை கொட்டி விற்பனை - கட்டுப்படுத்த முடியாது! என்னதான் வழி? - சட்ட வைத்தியர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Jun 21st 2023, 11:20 am
image

Advertisement

வீதி வீதியாக போதைப் பொருளை கொட்டி விற்பனை செய்தாலும் அதனை வாங்காத சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான வழி என யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பொன்னுத்துரை பிரணவன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலர் போதைப்பொருள் பாவனையை அரசாங்கம் நினைத்தால் தடுக்கலாம் எனக் கூறுகிறார்கள்.

என்னுடைய கருத்தின் பிரகாரம் எந்த ஒரு நாட்டிலும் போதைப்பொருள் பாவனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

அமெரிக்காவில் தொடங்கி சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் வரை போதைபொருள் வர்த்தகம் பாவனை இன்று வரை வேகமாக செயல்பட்டு  வருகிறது.

ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி, பொலிசாரால் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பலரை ஒரே நாளில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். ஆனால் இன்றும் அந்த நாட்டில் போதை வியாபாரத்தை தடுக்க முடியவில்லை.

சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால் போதைப்பொருள் பாவனைக்கு மரண தண்டனை காணப்படுகின்ற நிலையில் அந்த நாட்டில் ஹெக்கெயின், ஹெரோயின் போதைப் பொருட்கள் பாவனையில் இருக்கின்றது.

போதைப் பொருள் வியாபாரிகள் பாவனையாளர்கள் நாளுக்கு நாள் புதியவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிற நிலையில் இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது  துறை சார்ந்து செயற்படும்  அனைவருக்கும் பாரிய சவாலான விடயம்.

போதைப்பொருள் வர்த்தகர்கள் கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடல் வழியாக போதைப் பொருட்களை கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் போதப்பொருளை கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக காணப்படுகின்ற நிலையில் இனிமேல் காலங்களில் வீதிகளில் கூட போதைப்பொருள் விற்கப்படும்.

ஆகவே போதைப்பொருளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதை விடுத்து போதைப் பொருட்களை  வீதிகளில் விற்பனை செய்தாலும் அதனை வாங்காத சமுதாயத்தை உருவாக்குவதற்கு எவ்வாறான  முயற்சிகளை  மேற்கொள் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திப்பதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யார் மாவட்ட மேலதிக அரச அதிபர் (நிர்வாகம்) மருதலிங்கம் பிரதீபன், பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


வீதி வீதியாக போதைப் பொருளை கொட்டி விற்பனை - கட்டுப்படுத்த முடியாது என்னதான் வழி - சட்ட வைத்தியர் வெளியிட்ட தகவல் samugammedia வீதி வீதியாக போதைப் பொருளை கொட்டி விற்பனை செய்தாலும் அதனை வாங்காத சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான வழி என யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பொன்னுத்துரை பிரணவன் தெரிவித்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சிலர் போதைப்பொருள் பாவனையை அரசாங்கம் நினைத்தால் தடுக்கலாம் எனக் கூறுகிறார்கள்.என்னுடைய கருத்தின் பிரகாரம் எந்த ஒரு நாட்டிலும் போதைப்பொருள் பாவனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.அமெரிக்காவில் தொடங்கி சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் வரை போதைபொருள் வர்த்தகம் பாவனை இன்று வரை வேகமாக செயல்பட்டு  வருகிறது.ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி, பொலிசாரால் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பலரை ஒரே நாளில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். ஆனால் இன்றும் அந்த நாட்டில் போதை வியாபாரத்தை தடுக்க முடியவில்லை.சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால் போதைப்பொருள் பாவனைக்கு மரண தண்டனை காணப்படுகின்ற நிலையில் அந்த நாட்டில் ஹெக்கெயின், ஹெரோயின் போதைப் பொருட்கள் பாவனையில் இருக்கின்றது.போதைப் பொருள் வியாபாரிகள் பாவனையாளர்கள் நாளுக்கு நாள் புதியவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிற நிலையில் இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது  துறை சார்ந்து செயற்படும்  அனைவருக்கும் பாரிய சவாலான விடயம்.போதைப்பொருள் வர்த்தகர்கள் கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடல் வழியாக போதைப் பொருட்களை கொண்டு வருகிறார்கள்.இவ்வாறான நிலையில் போதப்பொருளை கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக காணப்படுகின்ற நிலையில் இனிமேல் காலங்களில் வீதிகளில் கூட போதைப்பொருள் விற்கப்படும்.ஆகவே போதைப்பொருளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதை விடுத்து போதைப் பொருட்களை  வீதிகளில் விற்பனை செய்தாலும் அதனை வாங்காத சமுதாயத்தை உருவாக்குவதற்கு எவ்வாறான  முயற்சிகளை  மேற்கொள் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திப்பதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த கலந்துரையாடலில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யார் மாவட்ட மேலதிக அரச அதிபர் (நிர்வாகம்) மருதலிங்கம் பிரதீபன், பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement