• May 19 2024

மனித சிறுநீர் கலந்த வாசனை திரவியம் விற்பனை! மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Chithra / Dec 19th 2022, 5:26 pm
image

Advertisement

மனித சிறுநீர் அடங்கிய போலி வாசனை திரவியத்தை விற்பனை செய்த லண்டனை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் தொழிலதிபர் ஒருவர் வாசனை திரவியங்களை மொத்த விலையில் விற்பனை செய்து பெரும் வருமானம் ஈட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ஆனால் அவரது வாசனை திரவியத்தின் உண்மைத்தன்மை அதிர்ச்சிக்கிறது.

விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்களில் சிறுநீரை விற்பனை செய்த அவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மான்செஸ்டரை சேர்ந்த அந்தத் தொழிலதிபரை பொலிஸார் கைது செய்தனர். சோதனையில், 400-க்கும் மேற்பட்ட போலி வாசனை திரவிய போத்தல்கள், ஏழு டன் அளவிலான போலியான ஆடைகள், அணிகலன்கள் மற்றும் வயர்லெஸ் இயர்போன்கள் சிக்கியது.


லண்டன் நகரப் படையின் காவல்துறை அறிவுசார் சொத்துக் குற்றப் பிரிவு மான்செஸ்டரில் உள்ள சீத்தம் ஹில்லில் உள்ள இரண்டு வணிக வளாகங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீண்ட காலமாக சொந்தமாக வாசனை திரவியம் தயாரித்து வந்ததாகவும், இதன் மூலம் ஏராளமான பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. விலையுயர்ந்த பாட்டில்களை உபயோகித்து அதில் தனக்கு சொந்தமான வாசனை திரவியத்தை நிரப்பி மொத்த விலைக்கு விற்பார்.


ஆய்வக சோதனைக்குப் பிறகு, வாசனை திரவியங்களில் சயனைடு உள்ளிட்ட பல நச்சு இரசாயனங்கள் மற்றும் மனித சிறுநீரின் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அசல் வாசனையைப் போன்ற போலி வாசனை திரவியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை எச்சரித்தது. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மனித சிறுநீர் கலந்த வாசனை திரவியம் விற்பனை மக்களுக்கு கடும் எச்சரிக்கை மனித சிறுநீர் அடங்கிய போலி வாசனை திரவியத்தை விற்பனை செய்த லண்டனை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.லண்டனில் தொழிலதிபர் ஒருவர் வாசனை திரவியங்களை மொத்த விலையில் விற்பனை செய்து பெரும் வருமானம் ஈட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் அவரது வாசனை திரவியத்தின் உண்மைத்தன்மை அதிர்ச்சிக்கிறது.விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்களில் சிறுநீரை விற்பனை செய்த அவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.மான்செஸ்டரை சேர்ந்த அந்தத் தொழிலதிபரை பொலிஸார் கைது செய்தனர். சோதனையில், 400-க்கும் மேற்பட்ட போலி வாசனை திரவிய போத்தல்கள், ஏழு டன் அளவிலான போலியான ஆடைகள், அணிகலன்கள் மற்றும் வயர்லெஸ் இயர்போன்கள் சிக்கியது.லண்டன் நகரப் படையின் காவல்துறை அறிவுசார் சொத்துக் குற்றப் பிரிவு மான்செஸ்டரில் உள்ள சீத்தம் ஹில்லில் உள்ள இரண்டு வணிக வளாகங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீண்ட காலமாக சொந்தமாக வாசனை திரவியம் தயாரித்து வந்ததாகவும், இதன் மூலம் ஏராளமான பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. விலையுயர்ந்த பாட்டில்களை உபயோகித்து அதில் தனக்கு சொந்தமான வாசனை திரவியத்தை நிரப்பி மொத்த விலைக்கு விற்பார்.ஆய்வக சோதனைக்குப் பிறகு, வாசனை திரவியங்களில் சயனைடு உள்ளிட்ட பல நச்சு இரசாயனங்கள் மற்றும் மனித சிறுநீரின் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து, காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அசல் வாசனையைப் போன்ற போலி வாசனை திரவியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை எச்சரித்தது. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement