• May 05 2024

சர்வதேச தலைவர்களுக்கு யுனிசெப் மாநாட்டில் வைத்து அரைகூவல் விடுத்த சம்மாந்துறை சிறுமி! samugammedia

Chithra / Jun 30th 2023, 12:21 pm
image

Advertisement

கொழும்பில்  (28) இடம்பெற்ற யுனிசெப் சர்வதேச அமைப்பின் Bussiness Council அங்குராப்பண நிகழ்வில் சிறப்பு உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்ட 12 வயது சிறுமி மின்மினி மின்ஹா சர்வதேச தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இம் மாநாடானது யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கொக் தலைமையில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில் சிரேஷ்ட ஆய்வாளர் ஜலீல் ஜீ அவர்களின் புதல்வியும், சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி கற்று வரும் சமூக, சூழலியல் செயற்பாட்டாளருமான மின்மினி மின்ஹா உரையாற்றினார்.

இதன் போது “ஓர் அடர்ந்த மரமானது 12 பேர் சுவாசித்து உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. அதனை வெட்டினால் 12 பேரைக் கொலை செய்வதனைப் போலுள்ளதாக உணரவில்லையா? என்று 12 வயது சிறுமியாகிய நான் உலகத்தாரிடம் கேட்கிறேன்.

2015 இல் பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இன்று வரையும் கையெழுத்திடாத உலக நாடுகளின் தலைவர்கள் இவ் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இணைந்து கொள்ளுங்கள் என பகிரங்க அழைப்பினை விடுகிறேன் என்றும், நான் இச்சபையினோர் முன்னிலையில் ஓர் வேண்டுகோளை சர்வதேசத்துக்கு விடுக்கிறேன்

அதாவது உலகளவில் வெப்ப அதிகரிப்பினை தடுப்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 2015 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இவ் ஒப்பந்தத்தில் 12 டிசம்பர். 2015 இல் 55 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.

அதில் இலங்கை 2016 - ஏப்ரல்- 22 ம் திகதி கைச்சாத்திட்டு விட்டது. பாரிஸ் உடன்படிக்கை 2016 - நவம்பர் -4ம் திகதி அமுலுக்கு வந்தது.

இந்நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலை அதிகரிப்பை 02 டிக்கிரி செல்சியஸ்ஸால் குறைத்தல் அல்லாது போனால் 1.5 டிக்கிரி செல்சியஸினாலாவது குறைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.“ என்றார்.

சர்வதேச தலைவர்களுக்கு யுனிசெப் மாநாட்டில் வைத்து அரைகூவல் விடுத்த சம்மாந்துறை சிறுமி samugammedia கொழும்பில்  (28) இடம்பெற்ற யுனிசெப் சர்வதேச அமைப்பின் Bussiness Council அங்குராப்பண நிகழ்வில் சிறப்பு உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்ட 12 வயது சிறுமி மின்மினி மின்ஹா சர்வதேச தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இம் மாநாடானது யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கொக் தலைமையில் இடம்பெற்றது.இம் மாநாட்டில் சிரேஷ்ட ஆய்வாளர் ஜலீல் ஜீ அவர்களின் புதல்வியும், சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி கற்று வரும் சமூக, சூழலியல் செயற்பாட்டாளருமான மின்மினி மின்ஹா உரையாற்றினார்.இதன் போது “ஓர் அடர்ந்த மரமானது 12 பேர் சுவாசித்து உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. அதனை வெட்டினால் 12 பேரைக் கொலை செய்வதனைப் போலுள்ளதாக உணரவில்லையா என்று 12 வயது சிறுமியாகிய நான் உலகத்தாரிடம் கேட்கிறேன்.2015 இல் பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இன்று வரையும் கையெழுத்திடாத உலக நாடுகளின் தலைவர்கள் இவ் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு இணைந்து கொள்ளுங்கள் என பகிரங்க அழைப்பினை விடுகிறேன் என்றும், நான் இச்சபையினோர் முன்னிலையில் ஓர் வேண்டுகோளை சர்வதேசத்துக்கு விடுக்கிறேன்அதாவது உலகளவில் வெப்ப அதிகரிப்பினை தடுப்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 2015 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இவ் ஒப்பந்தத்தில் 12 டிசம்பர். 2015 இல் 55 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.அதில் இலங்கை 2016 - ஏப்ரல்- 22 ம் திகதி கைச்சாத்திட்டு விட்டது. பாரிஸ் உடன்படிக்கை 2016 - நவம்பர் -4ம் திகதி அமுலுக்கு வந்தது.இந்நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலை அதிகரிப்பை 02 டிக்கிரி செல்சியஸ்ஸால் குறைத்தல் அல்லாது போனால் 1.5 டிக்கிரி செல்சியஸினாலாவது குறைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.“ என்றார்.

Advertisement

Advertisement

Advertisement