• Oct 01 2024

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 9:31 am
image

Advertisement


தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ள ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயின்ற 7, 500 ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் தேசிய கல்வியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது மதிப்பாய்வுகளின் பின்னர் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


இதற்கமைய, தேசிய மற்றும் மாகாண ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாணங்களின் ஊடாக மாகாண ஆசிரியர் வெற்றிடமும், கல்வி அமைச்சின் ஊடாக தேசிய பாடசாலையின் வெற்றிடமும் பூர்த்தி செய்யப்படும்.

பெரும்பாலும் ஏப்ரல் மாதம் நிறைவடைவதற்கு முன்னதாக தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ள ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயின்ற 7, 500 ஆசிரிய மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் தேசிய கல்வியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அது மதிப்பாய்வுகளின் பின்னர் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்கமைய, தேசிய மற்றும் மாகாண ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மாகாணங்களின் ஊடாக மாகாண ஆசிரியர் வெற்றிடமும், கல்வி அமைச்சின் ஊடாக தேசிய பாடசாலையின் வெற்றிடமும் பூர்த்தி செய்யப்படும்.பெரும்பாலும் ஏப்ரல் மாதம் நிறைவடைவதற்கு முன்னதாக தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement