• May 17 2024

சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு கௌரவிப்பு samugammedia

Chithra / Jun 26th 2023, 10:48 pm
image

Advertisement

இந்தியா - புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவிற்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்தநிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போட்டி கடந்த 18.06.2023 ஆம் திகதி 12 சர்வதேச நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.


இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெண்கலப் பதக்கத்தினை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இதன்போது குறித்த வீராங்கனைக்கு மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உதவி மாவட்டச்செயலாளர் சத்தியஜீவிதா மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் நினைவு கேடயத்தை வழங்கி கெளரவித்துள்ளார்.


மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், மேலதிக அரச அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு கௌரவிப்பு samugammedia இந்தியா - புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவிற்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்தநிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த போட்டி கடந்த 18.06.2023 ஆம் திகதி 12 சர்வதேச நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெண்கலப் பதக்கத்தினை வென்று பெருமை சேர்த்துள்ளார்.இதன்போது குறித்த வீராங்கனைக்கு மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து உதவி மாவட்டச்செயலாளர் சத்தியஜீவிதா மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் நினைவு கேடயத்தை வழங்கி கெளரவித்துள்ளார்.மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், மேலதிக அரச அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement