• Sep 20 2024

சமுர்த்தி தெரிவில் முறைகேடு - மக்களுக்கு யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! samugammedia

Chithra / Jun 27th 2023, 12:38 pm
image

Advertisement

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய  மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ம்  திகதி வரை அனுப்பி வைக்க முடியும், எனவே   அந்த விடயம்  தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாலசுந்தரன்  தெரிவித்தார் .

சமுர்த்தி தெரிவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரிடம் என வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றிருந்தால் எதிர்வரும்  ஜூன் மாதம் 10ம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளைமாவட்ட  சமுர்த்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

அந்த மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .


சமுர்த்தி தெரிவில் முறைகேடு - மக்களுக்கு யாழ்.அரச அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு. samugammedia யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் பாதிக்கப்பட்டோர் தங்களுடைய  மேன்முறையீடுகளை ஜூன் மாதம் 10 ம்  திகதி வரை அனுப்பி வைக்க முடியும், எனவே   அந்த விடயம்  தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாலசுந்தரன்  தெரிவித்தார் .சமுர்த்தி தெரிவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரிடம் என வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.குறித்த சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றிருந்தால் எதிர்வரும்  ஜூன் மாதம் 10ம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளைமாவட்ட  சமுர்த்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.அந்த மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement