• Oct 06 2024

சரத் வீரசேகர அமெரிக்கா செல்லத் தடை? வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Sep 25th 2023, 1:52 pm
image

Advertisement

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா, நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து சபாநாயகர் அமெரிக்க தூதுவரிடம் விளக்கமொன்றை பெறுவார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு விசா வழங்கத் தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர அமெரிக்கா செல்லத் தடை வெளியான காரணம்.samugammedia பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா, நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து சபாநாயகர் அமெரிக்க தூதுவரிடம் விளக்கமொன்றை பெறுவார் என நம்புவதாகவும் தெரிவித்தார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். தனக்கு விசா வழங்கத் தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement