விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் காரணமாக நேற்று மதியம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
மகாவலி அதிகார சபையின் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவரது அரசியல் அலுவலகம் 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது அழிக்கப்பட்டது.
இதற்கு இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷ மீதான வழக்கு கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, கொழும்பு பிரதான நீதவான், அவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் காரணமாக நேற்று மதியம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.மகாவலி அதிகார சபையின் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவரது அரசியல் அலுவலகம் 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது அழிக்கப்பட்டது.இதற்கு இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷ மீதான வழக்கு கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது, கொழும்பு பிரதான நீதவான், அவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.