• Nov 24 2024

அரிசி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சதொச நிறுவனம்!

Chithra / Nov 22nd 2024, 1:05 pm
image


நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது.

இதற்கிடையில், பிரபல சுப்பர் மார்கட் ஒன்றில், ஒரு வகை அரிசியானது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மூன்று கிலோ மட்டுமே வழங்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதன்படி சம்பா மற்றும் நாட்டு அரிசி கிலோ  90 ரூபாவாகவும், கெக்குலு அரிசி கிலோ விலை 85 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ விலை 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இருந்த போதிலும், இந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராத படியினால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய அரிசி தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரிசி விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சதொச நிறுவனம் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது.இதற்கிடையில், பிரபல சுப்பர் மார்கட் ஒன்றில், ஒரு வகை அரிசியானது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மூன்று கிலோ மட்டுமே வழங்கப்படுகின்றது.அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.இதன்படி சம்பா மற்றும் நாட்டு அரிசி கிலோ  90 ரூபாவாகவும், கெக்குலு அரிசி கிலோ விலை 85 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ விலை 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.இருந்த போதிலும், இந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராத படியினால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், தற்போதைய அரிசி தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement