• Sep 22 2024

500 இளைஞர் யுவதிகளுக்கு புலமை பரிசில்கள்..!

Chithra / Dec 17th 2022, 8:16 am
image

Advertisement

“Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேண்டுகோலுக்கு அமைய “Jumb start Srilanka” வேலைத்திட்டத்தின் கீழ் ரொட்டரி கழகத்தினால் 500 இளைஞர் யுவதிகளுக்கு புலமை பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.


இப்புலமை பரிசில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப துறையில் நான்கு வருட உயர்கல்விக்காக சுமார் 2பில்லியன் ரூபா பெருமதியான புலமை பரிசில்கள் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட 500 இளைஞர் யுவவழங்கி யுவதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் இதன் மூலம் பிளீப்பைன் நாட்டின் பல்கலை கழகத்தில் இத்துறைக்கான உயர்கல்வியினை தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கடந்த 14.12.2022 (வியாழன் )அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு ரொட்டரி கழக சர்வதேச தலைவி திருமதி. ஜெனிபர் ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றதோடு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அவ்வமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் /பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரான் டீ சில்வா, ரொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஆளுநர் புபுது டீ சொய்சா, செய்ற்திட்ட பிரதாணி கலாநிதி ரோஹான்த அத்துகொரல்ல ரொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான முன்னாள் ஆளுநர் திருமதி கௌரி ராஜன் முதலியோர்களோடு அரச அதிகாரிகள், மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

500 இளைஞர் யுவதிகளுக்கு புலமை பரிசில்கள். “Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேண்டுகோலுக்கு அமைய “Jumb start Srilanka” வேலைத்திட்டத்தின் கீழ் ரொட்டரி கழகத்தினால் 500 இளைஞர் யுவதிகளுக்கு புலமை பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.இப்புலமை பரிசில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப துறையில் நான்கு வருட உயர்கல்விக்காக சுமார் 2பில்லியன் ரூபா பெருமதியான புலமை பரிசில்கள் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட 500 இளைஞர் யுவவழங்கி யுவதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் இதன் மூலம் பிளீப்பைன் நாட்டின் பல்கலை கழகத்தில் இத்துறைக்கான உயர்கல்வியினை தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.கடந்த 14.12.2022 (வியாழன் )அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு ரொட்டரி கழக சர்வதேச தலைவி திருமதி. ஜெனிபர் ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்றதோடு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அவ்வமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் /பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரான் டீ சில்வா, ரொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஆளுநர் புபுது டீ சொய்சா, செய்ற்திட்ட பிரதாணி கலாநிதி ரோஹான்த அத்துகொரல்ல ரொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான முன்னாள் ஆளுநர் திருமதி கௌரி ராஜன் முதலியோர்களோடு அரச அதிகாரிகள், மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement