குருணாகல் - கடிகமுவ, கொஸ்வத்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்டுள்ளது.
தரன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜே.எச். கலிந்து மிஹிரங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன், கடிகமுவவில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு நபர்களால் மோட்டார் சைக்கிளின் நடுவில் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியில் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்தன.
தலையில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய இருவரும் காயமடைந்து குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குளியாப்பிட்டிய, பகுதியில் உள்ள பாடசாலையில் 12 ஆம் வகுப்பில் கற்கும் குறித்த மாணவன் கல்லூரியின் கைப்பந்து அணியில் திறமையான வீரராக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோர விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி குருணாகல் - கடிகமுவ, கொஸ்வத்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்டுள்ளது.தரன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜே.எச். கலிந்து மிஹிரங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கடிகமுவவில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு நபர்களால் மோட்டார் சைக்கிளின் நடுவில் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியில் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்தன.தலையில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய இருவரும் காயமடைந்து குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.குளியாப்பிட்டிய, பகுதியில் உள்ள பாடசாலையில் 12 ஆம் வகுப்பில் கற்கும் குறித்த மாணவன் கல்லூரியின் கைப்பந்து அணியில் திறமையான வீரராக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.