• Nov 26 2024

பிரதமரை சந்தித்த பாடசாலை மாணவர்கள்...! விடுக்கப்பட்ட கோரிக்கை...!samugammedia

Sharmi / Dec 16th 2023, 3:21 pm
image

புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அண்மையில் அலரி மாளிகையை பார்வையிட சென்றனர்.

பாடசாலை அதிபர் ஏ.எம்.நஜிபுதீன் தலைமையில் சென்ற குழுவினரை பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன, வரவேற்று ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், குறித்த பாடசாலைக்கு நினைவுச் சின்னமாக பிரதமர் தினேஷ் குணவர்தன, மரம் மற்றும் நினைவுப்பலகையும் வழங்கி வைத்தார்.

மேலும், கற்பிட்டிக்கு நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் பற்றி  அங்கு விஜயம் செய்த பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்தோடு, பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை தொடர்பிலும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன்,  பாடசாலைக்கு சமூகமளிக்குமாறும் மாணவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர் .

இதன்போது, பிரதேச செயலாளர் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், பாடசாலைக்கு விஜயம் செய்வதற்கு தாம் முயற்சி செய்வதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன அங்கு சென்ற ஆசிரியர்கள், மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.


பிரதமரை சந்தித்த பாடசாலை மாணவர்கள். விடுக்கப்பட்ட கோரிக்கை.samugammedia புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அண்மையில் அலரி மாளிகையை பார்வையிட சென்றனர்.பாடசாலை அதிபர் ஏ.எம்.நஜிபுதீன் தலைமையில் சென்ற குழுவினரை பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன, வரவேற்று ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அத்துடன், குறித்த பாடசாலைக்கு நினைவுச் சின்னமாக பிரதமர் தினேஷ் குணவர்தன, மரம் மற்றும் நினைவுப்பலகையும் வழங்கி வைத்தார்.மேலும், கற்பிட்டிக்கு நிரந்தர பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் பற்றி  அங்கு விஜயம் செய்த பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அத்தோடு, பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை தொடர்பிலும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன்,  பாடசாலைக்கு சமூகமளிக்குமாறும் மாணவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர் .இதன்போது, பிரதேச செயலாளர் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், பாடசாலைக்கு விஜயம் செய்வதற்கு தாம் முயற்சி செய்வதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன அங்கு சென்ற ஆசிரியர்கள், மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement