• May 06 2024

இன்று பாடசாலைகள் ஆரம்பம் - சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

Chithra / Apr 24th 2024, 8:07 am
image

Advertisement


2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கட்டம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை மே 20 ஆம் திகதி தொடங்க உள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் நாட்டில், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக,  பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக பாடசாலை சூழலை தூய்மைப்படுத்துவதற்கு, 

அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரியுள்ளார். 

அத்துடன், பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் தொடர்பிலும்  விசேட கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இதேவேளை, புத்தாண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் சிறுவர்களிடத்தில், வயிற்றுப்போக்கு மற்றும் இன்ஃப்ளுவென்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக  கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


இன்று பாடசாலைகள் ஆரம்பம் - சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை 2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கட்டம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை மே 20 ஆம் திகதி தொடங்க உள்ளது.இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மறுபுறம் நாட்டில், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக,  பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக பாடசாலை சூழலை தூய்மைப்படுத்துவதற்கு, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரியுள்ளார். அத்துடன், பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் தொடர்பிலும்  விசேட கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, புத்தாண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் சிறுவர்களிடத்தில், வயிற்றுப்போக்கு மற்றும் இன்ஃப்ளுவென்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக  கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement