• May 02 2024

கொளுத்தும் வெயில்; உயிருக்கே ஆபத்தாகும் ஹீட் ஸ்ட்ரோக்..!!!

Tamil nila / Apr 19th 2024, 9:22 pm
image

Advertisement

அதிகமான வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இயல்பாக மனிதர்களின் உடல்நிலை 98.6 டிகிர் ஃபாரன்ஹீட், 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். இதனை விட அதிகரித்து 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் செல்கையில் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அதிகளவு தண்ணீர், காய்கறிகளை எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் சூடான பானங்களைத் தவிர்க்கவும். தளர்வான பருத்தி ஆடை மற்றும் தொப்பி அணிந்து வெளியே செல்வது நல்லது.

மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். மூச்சு திணறல் ஏற்பட்டால், ஆரம்பித்தால், அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துங்கள். நிழலில் அல்லது குளிர்ச்சியான பகுதிக்கு செல்லுங்கள்.

உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் வாந்தி மற்றும் குமட்டல் வலிப்பு வேகமாக மூச்சுவிடுவது மயக்கம் குழப்பம் அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல் வியர்வை இல்லாமல் வறண்ட சருமம், மிகவும் வெளிர் அல்லது சிவந்த தோல் உணர்வு இழப்பு நுரையீரலில் சத்தம் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுவது போன்றவை இதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. 

கொளுத்தும் வெயில்; உயிருக்கே ஆபத்தாகும் ஹீட் ஸ்ட்ரோக். அதிகமான வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இயல்பாக மனிதர்களின் உடல்நிலை 98.6 டிகிர் ஃபாரன்ஹீட், 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். இதனை விட அதிகரித்து 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் செல்கையில் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அதிகளவு தண்ணீர், காய்கறிகளை எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் சூடான பானங்களைத் தவிர்க்கவும். தளர்வான பருத்தி ஆடை மற்றும் தொப்பி அணிந்து வெளியே செல்வது நல்லது.மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். மூச்சு திணறல் ஏற்பட்டால், ஆரம்பித்தால், அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துங்கள். நிழலில் அல்லது குளிர்ச்சியான பகுதிக்கு செல்லுங்கள்.உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் வாந்தி மற்றும் குமட்டல் வலிப்பு வேகமாக மூச்சுவிடுவது மயக்கம் குழப்பம் அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல் வியர்வை இல்லாமல் வறண்ட சருமம், மிகவும் வெளிர் அல்லது சிவந்த தோல் உணர்வு இழப்பு நுரையீரலில் சத்தம் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுவது போன்றவை இதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement