• Mar 18 2025

யாழில் காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு..!

Sharmi / Mar 18th 2025, 11:51 am
image

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் நடைபெற்று வருவதாக  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன் காணாமல் போயுள்ள மீனவர்கள் தொடர்பில் தேடுதல் உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்றுறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


யாழில் காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு. கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் நடைபெற்று வருவதாக  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அத்துடன் காணாமல் போயுள்ள மீனவர்கள் தொடர்பில் தேடுதல் உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய தேடுதல் இடம்பெற்று வருகின்றது.46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்றுறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement