• Jul 05 2025

இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்! ஒருவர் கைது

Chithra / Jul 4th 2025, 11:44 am
image


தமிழ்நாடு - ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடற்கரையில் 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இன்று, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், அங்கு ஒரு குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 132 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது தமிழ்நாடு - ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடற்கரையில் 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனபாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இன்று, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனசட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், அங்கு ஒரு குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 132 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement