• Nov 28 2024

இரண்டாவது கணவனின் வெறிச்செயல்; 4 வருடங்களின் பின் மலசலகூட குழியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!

Chithra / May 15th 2024, 8:24 am
image

 

காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால் கொலை செய்யப்பட்டு, மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலுக்ஷிகா சந்தமாலி என்ற 29 வயதான மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் மலசலகூட குழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கணவரை பிரிந்த நிலுக்ஷிகா சந்தமாலி, தனது  மூன்று பிள்ளைகளுடன் “பதல சாந்த” என அழைக்கப்படும் நபருடன் வாழ்ந்து வந்த நிலையில், காணாமல்போயிருந்ததாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகள், காலி குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை நடாத்திய பொலிஸார், 44 வயதுடைய குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும், சடலத்தை மலசலகூட குழியில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்துள்ளது.

பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

இரண்டாவது கணவனின் வெறிச்செயல்; 4 வருடங்களின் பின் மலசலகூட குழியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.  காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால் கொலை செய்யப்பட்டு, மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலுக்ஷிகா சந்தமாலி என்ற 29 வயதான மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் மலசலகூட குழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது முதலாவது கணவரை பிரிந்த நிலுக்ஷிகா சந்தமாலி, தனது  மூன்று பிள்ளைகளுடன் “பதல சாந்த” என அழைக்கப்படும் நபருடன் வாழ்ந்து வந்த நிலையில், காணாமல்போயிருந்ததாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகள், காலி குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை நடாத்திய பொலிஸார், 44 வயதுடைய குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரை கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும், சடலத்தை மலசலகூட குழியில் போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்துள்ளது.பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement