• Jan 07 2025

மவுசாகலையில் பெண்களுக்கான சுயத்தொழில் : ஊக்குவிப்பு விசேட வேலைத்திட்டம்

Tharmini / Dec 16th 2024, 1:00 pm
image

இலங்கையில் இயங்கி வரும் பிரபல வர்த்தக துறை நிறுவனமான GOOD MARKET நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்களுக்கான சுயத்தொழில் கற்கைக்கான விசேட வேலைத்திட்டம்.

கடந்த 9 மாதங்களாக மஸ்கெலியா மவுசாகலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் நைன்ஸா தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான இறுதிகட்ட உற்பத்தி அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (14) மஸ்கெலியா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

GOOD MARKET நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களில் கிளிநொச்சி, வவுனியா, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும் நிலையில் எமது மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு நைன்ஷா மகளிர் பிரிவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததுடன் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

GOOD MARKET நிறுவனத்தின் இந்த வேலைத்திட்டத்திற்கு மஸ்கெலியா TEA LEAF நிறுவனம் மற்றும் KNH ஆகிய அமைப்புகள் முழுமையான பங்களிப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நைன்ஷா மகளிர் பிரிவினால் உருவாக்கப்பட்ட Mountain Taste எனும் பெயரில் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டதுடன் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் றோயல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜ் அஷோக் அவர்களும், சமூக செயற்பாட்டாளர் திரு.ரொமேஸ் தர்மசீலன் அவர்களும், மஸ்கெலியா HNB வங்கி முகாமையாளர் அவர்களும், GOOD MARKET நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் மற்றும் இனைப்பாளர் ஆகியோரும், tea leaf நிறுவனத்தின் இனைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Good Marketing Production நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் ஷாரா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன்.

Mountain Taste உற்பத்தி பிரிவின் பிரதானி தலதா அவர்களினால் பல வகையான இயற்கை ஜேம் உற்பத்தி பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

Mountain Taste Product அமைப்பு மென்மேலும் வளர்ச்சி பெற்று கம்பெனியாக உருவெடுக்க வேண்டும்.





மவுசாகலையில் பெண்களுக்கான சுயத்தொழில் : ஊக்குவிப்பு விசேட வேலைத்திட்டம் இலங்கையில் இயங்கி வரும் பிரபல வர்த்தக துறை நிறுவனமான GOOD MARKET நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்களுக்கான சுயத்தொழில் கற்கைக்கான விசேட வேலைத்திட்டம்.கடந்த 9 மாதங்களாக மஸ்கெலியா மவுசாகலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் நைன்ஸா தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான இறுதிகட்ட உற்பத்தி அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (14) மஸ்கெலியா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.GOOD MARKET நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களில் கிளிநொச்சி, வவுனியா, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும் நிலையில் எமது மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு நைன்ஷா மகளிர் பிரிவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததுடன் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.GOOD MARKET நிறுவனத்தின் இந்த வேலைத்திட்டத்திற்கு மஸ்கெலியா TEA LEAF நிறுவனம் மற்றும் KNH ஆகிய அமைப்புகள் முழுமையான பங்களிப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.நைன்ஷா மகளிர் பிரிவினால் உருவாக்கப்பட்ட Mountain Taste எனும் பெயரில் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டதுடன் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் றோயல் மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ராஜ் அஷோக் அவர்களும், சமூக செயற்பாட்டாளர் திரு.ரொமேஸ் தர்மசீலன் அவர்களும், மஸ்கெலியா HNB வங்கி முகாமையாளர் அவர்களும், GOOD MARKET நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் மற்றும் இனைப்பாளர் ஆகியோரும், tea leaf நிறுவனத்தின் இனைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Good Marketing Production நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் ஷாரா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன்.Mountain Taste உற்பத்தி பிரிவின் பிரதானி தலதா அவர்களினால் பல வகையான இயற்கை ஜேம் உற்பத்தி பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது.Mountain Taste Product அமைப்பு மென்மேலும் வளர்ச்சி பெற்று கம்பெனியாக உருவெடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement