• Aug 05 2025

கிளிநொச்சியின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா கடமையேற்பு!

shanuja / Aug 4th 2025, 1:15 pm
image

கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பொலிஸ் அத்தியட்சகராக சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிசிர பெத்தர தந்திரி கொழும்பு தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதைத்தொடர்ந்து  கிளிநொச்சி பிராந்தியத்திற்கு சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா நியமிக்கப்பட்டார். 


இந்த நிலையில் புதிய அத்தியட்சகராக சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா தனது கடமைகளை இரணைமடுவில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.


இதற்கு முன்பு ஜெயசாந்த டீ சில்வா இதற்கு முன்பு கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார். 2017ஆம் ஆண்டு  காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா கடமையேற்பு கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பொலிஸ் அத்தியட்சகராக சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிசிர பெத்தர தந்திரி கொழும்பு தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதைத்தொடர்ந்து  கிளிநொச்சி பிராந்தியத்திற்கு சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதிய அத்தியட்சகராக சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா தனது கடமைகளை இரணைமடுவில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.இதற்கு முன்பு ஜெயசாந்த டீ சில்வா இதற்கு முன்பு கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார். 2017ஆம் ஆண்டு  காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement