• May 17 2024

பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது சென்பத்திரிசியார் கல்லூரி!

Sharmi / Dec 24th 2022, 4:28 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரிக்கும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் பலதசாப்த காலங்களாக இடம்பெற்று வரும் வரலாற்று சிறப்பு மிக்க பிக்னல் ஞாபகார்த்த காறப்பாந்தாட்ட கிண்ணத்தை இவ்வருடம் புனித பத்திரிசியார் கல்லூரி தனதாக்கி கொண்டது.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூராயின் பிக்னல் மைதானத்தில் இடம்பெற்ற காற்பந்தாட்ட சுற்றுபோட்டியில்  14,16,18 வயதிற்குட்பட்ட காறப்பாந்தட்ட போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்பாணக்கலூரியை சென்பத்திரிசியார் அணி வெற்றிகண்டது.

இதனையடுத்து பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான 20வயது பிரிவிற்குட்பட்ட காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி கல்லூரியின் கொடிகள் ஏற்றப்பட்டு கல்லூரி அதிபர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதனையடுத்து டெஸ்வின் தலைமயிலான பத்திரிசியார் அணியும் தனுஸ்ரன் தலைமையிலான வட்டு யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளும் மோதிய நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி எதுவித கோல்களையும் பெறாத நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி 8 கோல்களை பெற்று அபார வெற்றியடன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.


இதன் பொழுது சென்பத்திரிசியார் கல்லூரியின் சார்பில் ஜெறோம் நான்கு கோல்களையும், றெக்ஸ்மன்,சைனுஜன்,வசோன்,லியோ தலா ஒரு கோல்களையும் கல்லூரிக்கான பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ச்சியாக பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.இதன்பொழுது கல்லூரியின் அதிபர்கள்,உப அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் குறித்த போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது




பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது சென்பத்திரிசியார் கல்லூரி வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரிக்கும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் பலதசாப்த காலங்களாக இடம்பெற்று வரும் வரலாற்று சிறப்பு மிக்க பிக்னல் ஞாபகார்த்த காறப்பாந்தாட்ட கிண்ணத்தை இவ்வருடம் புனித பத்திரிசியார் கல்லூரி தனதாக்கி கொண்டது.நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூராயின் பிக்னல் மைதானத்தில் இடம்பெற்ற காற்பந்தாட்ட சுற்றுபோட்டியில்  14,16,18 வயதிற்குட்பட்ட காறப்பாந்தட்ட போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்பாணக்கலூரியை சென்பத்திரிசியார் அணி வெற்றிகண்டது.இதனையடுத்து பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான 20வயது பிரிவிற்குட்பட்ட காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி கல்லூரியின் கொடிகள் ஏற்றப்பட்டு கல்லூரி அதிபர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.இதனையடுத்து டெஸ்வின் தலைமயிலான பத்திரிசியார் அணியும் தனுஸ்ரன் தலைமையிலான வட்டு யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளும் மோதிய நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி எதுவித கோல்களையும் பெறாத நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி 8 கோல்களை பெற்று அபார வெற்றியடன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.இதன் பொழுது சென்பத்திரிசியார் கல்லூரியின் சார்பில் ஜெறோம் நான்கு கோல்களையும், றெக்ஸ்மன்,சைனுஜன்,வசோன்,லியோ தலா ஒரு கோல்களையும் கல்லூரிக்கான பெற்றுக்கொடுத்தனர்.தொடர்ச்சியாக பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.இதன்பொழுது கல்லூரியின் அதிபர்கள்,உப அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் குறித்த போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement